இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பருவகாலத்திற்கான பிரிவு இரண்டு (டிவிசன் 2) அணிகளுக்கிடையிலான 2017/18 கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டியொன்றில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரில் மற்றொரு வெற்றியை சுவைத்துள்ளது.
யதுசனின் சதத்துடன், மேலும் ஒரு வெற்றியை பதிவுசெய்த சென். ஜோன்ஸ் கல்லூரி
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் டிவிசன் 2 பாடசாலை…
பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் வசந்தன் யதுசன் முதலில் களத்தடுப்பினைத் தெரிவுசெய்தார்.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்வூட் கல்லூரி வீரர்கள் 60.1 ஓவர்களினை எதிர்கொண்டு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 124 ஓட்டங்களினை மாத்திரம் சேர்த்துக்கொண்டனர். அணியின் சார்பில் அதிகபட்சமாக டுலின் விஜயநாராயன 36 ஓட்டங்களினையும், ஹசிக்க கமகே 25 ஓட்டங்களினையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவிச்சில் சுழற்பந்து வீச்சாளர்களான சுபீட்சன், அபினாஷ் ஆகியோர் முறையே 3, 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.
பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரியினரை, கண்டி வீரர்கள் தமது சிறப்பான பந்துவீச்சின் மூலம் தாம் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கைக்கும் குறைவாக மட்டுப்படுத்தினர்.
லக்மல் டி சில்வா, தீகயூ பண்டார ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும், அனுல் செனவிரத்ன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற சென். ஜோன்ஸ் வீரர்களால் 48.3 ஓவர்களில் 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது
சென். ஜோன்ஸ் கல்லூரி முதற் பதினொருவர் அணியில் இவ்வருடம் முதல்முறையாக பிரவேசித்திருக்கக்கூடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான C.P தனுஜன் நிதானமாக ஆடி 46 ஓட்டங்களைச் சேகரித்திருந்தார். அபினாஷ் 21 ஓட்டங்களினைப் பெற்றுக்கொடுத்தார்.
எனவே, 17 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கியிருந்த கிங்ஸ்வூட் கல்லூரி அணியினருக்கு வடக்கு வீரர்கள் அதிர்ச்சியளித்தனர். சுழற்பந்துவீச்சாளர் அபினாஷ் 19 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களையும், வேகப்பந்து வீச்சாளர் கபில்ராஜ் 22 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனால் 34.4 ஓவர்களை எதிர்கொண்ட கிங்ஸ்வூட் கல்லூரியினர் வெறுமனே 70 ஓட்டங்களை மட்டும் சேகரித்து 88 என்ற வெற்றியிலக்கினை நிர்ணயித்தனர். அதிகபட்சமாக குசான் விதானாராச்சி அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றார்.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸிலும் C.P தனுஜன், அபினாஷ் இணை முறையே 27 மற்றும் 21 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் 26.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தனர். சௌமிய வன்னியாராச்சி, லக்மல் டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்து மைதானம்
16ஆவது பொன். விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்…..
இன்றைய வெற்றியுடன் போட்டித்தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரியானது விளையாடிய 05 போட்டிகளில் மூன்றில் வெற்றியினைப் பெற்றுள்ள அதேவேளை, ஒரு போட்டியினை சமநிலையில் நிறைவு செய்துள்ளனர். அவர்கள், ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணியுடனான போட்டியில் தோல்வியடைந்துள்ளனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரி அணி அடுத்து வரும் வாரங்களில் கேகாலை வித்தியாலயம் மற்றும் களனி ஸ்ரீ தர்மலோகா கல்லூரி ஆகிய அணிகளுடனான போட்டிகளுடன் தனது குழு நிலைப் போட்டிகளினை நிறைவு செய்யவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
கிங்ஸ்வூட் கல்லூரி,கண்டி – 124 (60.1 ஓவர்கள்) டிலின் விஜயநாராயன 36, ஹசிக கமகே 26, சுபீட்சன் 03/12,மேர்ஃபின் அபினாஷ் 02/19
சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 107 (48.3 ஓவர்கள்) C.P தனுஜன் 46, மேர்ஃபின் அபினாஷ் 21, லக்மல் டி சில்வா 03/20, தீகயூ பண்டார 03/22, அனுல் செனவிரத்ன 02/33
கிங்ஸ்வூட் கல்லூரி,கண்டி – 70 (34.4 ஓவர்கள்) குசன் விதானாராச்சி 26, மேர்ஃபின் அபினாஷ் 05/19, கனகரட்ணம் கபில்ராஜ் 04/22
சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 89/5 (26.2 ஓவர்கள்) C.P தனுஜன் 27, மேர்ஃபின் அபினாஷ் 21, சௌமிய பியசேன 02/15, லக்மல் டி சில்வா 02/36
போட்டி முடிவு –யாழ்ப்பாணம், சென். ஜோன்ஸ் கல்லூரி 05 விக்கெட்டுக்களால் வெற்றி