ரெட் ஸ்டார், ரட்னம், திஹாரிய அணிகளுக்கு இரண்டாவது வெற்றி

418

கடந்த வாரம் நடைபெற்ற டிவிசன் – 1 சுபர் சிக்ஸ் போட்டிகளில் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம், ரட்னம் விளையாட்டுக் கழகம் மற்றும் ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன வெற்றியைப் பதிவு செய்தன.

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் எதிர் ரெட் சன் விளையாட்டுக் கழகம்

நடைபெற்று முடிந்த ரெட் சன் மற்றும் திஹாரிய யூத் அணிகளுக்கு இடையிலான டிவிசன் – 1 சுபர் சிக்ஸ் போட்டியில், திஹாரிய யூத் அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கம்பளை வீகுலுவத்தை விளையாட்டரங்கில் நடைபெற்ற ரெட் சன் மற்றும் திஹாரிய யூத் அணிகளுக்கு இடையிலான போட்டியானது ஆரம்பம் முதல் இறுதி வரை கடுமையான போட்டியாகவே அமைந்தது. திஹாரிய யூத் அணியினால் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட 2 கோல்களின் மூலம், ரெட் சன் அணிக்கெதிரான இப்போட்டியில் வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.

போட்டியை ஆரம்பித்த திஹாரிய யூத் அணி முதல் பாதியில் ரெட் சன் அணிக்கு சவால் கொடுப்பதில் தோல்வி கண்டது.

போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் ரெட் சன் அணி முதல் வாய்ப்பை பெற்றது. எனினும் அவ்வாய்ப்பை கோலாக்குவதில் ரெட் சன் அணியின் முன்கள வீரரான, விமுக்தி மூலம் முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்து போட்டியின் 9 ஆவது நிமிடத்தில் மத்திய கள வீரர்களுக்கும், முன்கள வீரர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த சிறந்த பந்து பரிமாற்றத்தின் பின்னர், பொன்னப்பெரும மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற மைக்கல், பந்தை இடது பக்க மூலைக்கு உள்ளனுப்பினார். உள்ளனுப்பப்பட்ட பந்தை விமுக்தி தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தானது கோல் கம்பங்களிற்கு வெளியால் சென்றது.

ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ் முதல் வாரத்தில் வெற்றி

நீண்ட நேர பந்து பரிமாற்றத்திற்கு பின்னர், போட்டியின் 31 ஆவது நிமிடத்தில் தனஞ்சய மூலம் பெனால்டி எல்லையை நோக்கி உள்ளனுப்பப்பட்ட பந்தை விமுக்தி சிறந்த முறையில் நிறுத்தி, கோலை நோக்கி உதைந்தார். உதையப்பட்ட பந்தை சிறப்பாக செயற்பட்ட கோல் காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

முதல் பாதியின் இறுதி வாய்ப்பையும், போட்டியின் முதல் வாய்ப்பையும் திஹாரிய யூத் அணி போட்டியின் 43 ஆவது நிமிடத்தில் பெற்றது. எனினும் திஹாரிய யூத் அணியின் முன்கள வீரர்களால் அதன் மூலம் கோலைப் பெற முடியவில்லை. மேலும் முதல் பாதியின் இறுதித்தருவாயில் ரெட் சன் அணி அதிகமான கோல் வாய்ப்புக்களை பெற்ற போதும், அவ்வணி வீரர்களால் வெற்றிகரமாக எந்தவொரு கோலையும் அவ்வாய்ப்புக்களின் மூலம் பெற முடியவில்லை. அத்துடன் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் 0 – 0 ரெட் சன் விளையாட்டுக் கழகம்

இரண்டாம் பாதி ஆரம்பித்து 2 நிமிடங்களிலேயே முதல் வாய்ப்பை ரெட் சன் அணி பெற்றது. மைக்கல் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை எந்த வித பின்கள வீரரின் சவாலுமின்றி கிம்ஹான தனது தலையால் முட்டி கோலாக்க முயன்றார். எனினும் பந்தை சிறந்த முறையில் கோலினுள் உட்செலுத்த  முடியவில்லை.

போட்டியின் 50 ஆவது நிமிடத்தில், சஜீத் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை பெற்ற திஹாரிய யூத் அணியின் முன்கள வீரரான எவென்ஸ் மூலம், பின்கள வீரர்களையும் தாண்டி சிறந்த முறையில் முதல் கோல் பெறப்பட்டது.

இரண்டாம் பாதியில் அதிகமாக திஹாரிய யூத் அணி எதிரணியின் எல்லையில் இருந்த வண்ணம் சவால் கொடுப்பதை அவதானிக்க முடிந்தது. அதன் பலனாக போட்டியின் 77 ஆவது நிமிடத்தில், வலது பக்க பெனால்டி எல்லையிலிருந்து சஜீத் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை ரெட்சன் அணியின் பின்கள வீரர்கள் தடுத்தாடினர். அதன்போது  தன்னை அடைந்த  பந்தை பெற்ற சார்ள்ஸ் மூலம் திஹாரிய யூத் அணிக்கு இரண்டாவது கோல் பெறப்பட்டது.

போட்டியின் பின்னரான கைகலப்பிற்காக செரண்டிப் கழகம்மீது நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து போட்டியின் 88 ஆவது நிமிடத்தில் ரெட் சன் அணியால்  மீண்டும் சவால் விடுக்கப்பட்டது. மைக்கல் மூலம் வலது பக்க மூலையிலிருந்து பெனால்டி எல்லைக்கு உள்ளனுப்பப்பட்ட  பந்தை, பந்தானது தரையை வந்தடையும் முன்னரே விமுக்தி கோலை நோக்கி உதைந்தார். எனினும் கோல் காப்பாளர் சிறப்பாக செயற்பட்டு பந்தை தட்டிவிட்டார்.

அத்துடன் வழங்கப்பட்ட மேலதிக நேரத்துடன் நடுவர் போட்டியை நிறைவு செய்தார். இரண்டாம் பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களின் மூலம் திஹாரிய யூத் அணி போட்டியில் வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் 2 – 0 ரெட் சன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் – எவென்ஸ் 55′, சார்ள்ஸ் 77′

மஞ்சள் அட்டைகள்

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகம் – பத்ம பெறும 29′, இஸாம் 39′, எவனெஸ் 72′, சார்ள்ஸ் 83′, பிரதீப் 92′


செரண்டிப் கால்பந்து கழகம் எதிர் ரட்னம் விளையாட்டுக் கழகம்

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முதல் பாதியில் பெற்ற கோலினால் ரட்னம் அணி தமது அடுத்த வெற்றியையும் சுவைத்தது. மறுமுனையில் செரண்டிப் அணி தமது முன்னைய போட்டிகள் போலவே பல இலகுவான வாய்ப்புக்களை வீணடித்தமையினால் எந்தவித கோல்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆட்டம் ஆரம்பமாகி முதல் 30 நிமிடங்களுக்கு இரு அணிகளும் சரிசமமான ஆதிக்கத்துடனேயே விளையாடி வந்தன. இந்நிலையில் 32ஆவது நிமிடத்தில் ரட்னம் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது அவர்கள் போட்டியில் முன்னிலை பெற்றனர்.

குறித்த ப்ரீ கிக்கை ரட்னம் அணியின் அனுபவ வீரர் மதுரங்க பெற்றார். அவர் வேகமாக அடித்த பந்து செரண்டிப் அணிக்காக தடுப்பில் இருந்த வீரர் ஒருவரின் காலில் பட்டு திசை திரும்பி, கோல் காப்பாளர் இல்லாத பகுதியினால் கோல் கம்பங்களுக்குள் சென்றது.

அதன் பின்னர் இரு அணி வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிய முதல் பாதி முடிவடைந்தது

முதல் பாதி: செரண்டிப் கால்பந்து கழகம் 0 – 1 ரட்னம் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதியில் ஆட்டத்தை சமப்படுத்துவதற்கான நோக்குடன் ஆடிய செரண்டிப் வீரர்கள் பல வாய்ப்புக்களை உருவாக்கினர். எனினும் அவ்வணி சார்பாக சிறந்த நிறைவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கொழும்பை சம்பியனாக்கிய ரினெளன் முன்னாள் வீரர் பசால்

ஆட்டத்தின் 60 நிமிடங்கள் கடந்ததும் இரு அணி வீரர்களும் சற்று ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்தனர். இதனால் இரு அணி வீரர்களும் அதிகமான மஞ்சள் அட்டைகளைப் பெற்றதுடன், ரட்னம் அணி வீரர் சபீர் இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மறுமுனையில் செரண்டிப் கழக வீரர்கள் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பல முயற்சிகளை ரட்னம் கோல் காப்பாளர் ஷெஹான் சிறந்த முறையில் தடுத்து அணிக்கு பங்காற்றினார்.

இதனால் இறுதிவரை செரண்டிப் வீரர்களால் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போக, ரட்னம் அணி மதுரங்கவின் முதல் பாதி கோலுடன் சுபர் சிக்ஸ் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: செரண்டிப் கால்பந்து கழகம் 0 – 1 ரட்னம் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரட்னம் விளையாட்டுக் கழகம் – P.S மதுரங்க 32’


ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் எதிர் கொம்ரெட்ஸ் விளையாட்டுக் கழகம்

களுத்தறை வெர்னான்டஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் கொம்ரெட்ஸ் அணியை எதிர் கொண்ட ரெட் ஸ்டார் அணி 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கொம்ரெட்ஸ் அணியை வீழ்த்தியது.