SA20 லீக் தொடரில் ஆடவிருக்கும் முதல் இந்திய வீரராக கார்த்திக்

SA20 League 2025

142

இந்தியாவின் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான தினேஷ் கார்த்திக் புதிய பருவத்திற்கான தென்னாபிரிக்காவின் SA20 லீக் தொடரில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.  

இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

அந்தவகையில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு  பெறுவதாக அண்மையில் அறிவித்த தினேஷ் கார்த்திக், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் SA20 லீக் தொடரில் பார்ல் ரோயல்ஸ் அணிக்காக ஆடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

அதேநேரம் தினேஷ் கார்த்திக் SA20 லீக் தொடர் ஒப்பந்தம் மூலம் அந்த தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்கிற பெருமையினைப் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது 

தான் SA20 லீக் தொடரில் விளையாடும் விடயத்தினை தினேஷ் கார்த்திக், தானாகவே உறுதிப்படுத்தியிருக்கின்றார்இதேநேரம் தினேஷ் கார்த்திக்கின் பார்ல் ரோயல்ஸ் அணி, டேவிட் மில்லர் மூலம் வழிநடாத்தப்படுவதோடு அவ்வணி இறுதியாக நடைபெற்ற SA20 லீக் தொடரில் எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

அதேவேளை SA20 லீக் தொடர் புதிய பருவத்திற்கான போட்டிகள் அடுத்த ஆண்டின் ஜனவரி 8ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 9ஆம் திகதி வரையில் நடைபெறவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.   

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<