மீண்டும் இலங்கை ஒருநாள் குழாத்தில் திமுத் கருணாரத்ன!

Cricket World Cup 2023

1112

கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான பூர்வாங்க குழாத்தில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தொடர் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்களுக்கான 30 பேர்கொண்ட இலங்கை பூர்வாங்க குழாம் அண்மையில் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

பஞ்சாப் அணியின் பிளே-ஓஃப் வாய்ப்பை கேள்விக்குறியாக்கிய டெல்லி

அறிவிக்கப்பட்டிருந்த குழாத்தில் மேலதிகமாக திமுத் கருணாரத்னவும் இணைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா ஆகியோரின் உபாதைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் பெரேரா ஆகியோர் இந்த குழாத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பதுடன், இவர்களின் உபாதை அச்சத்தை கவனத்திற்கொண்டு பதில் வீரராக திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் இளம் வீரர்களுடன் செல்லும் திட்டம் காரணமாக முன்னணி துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இவர் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டதுடன், இறுதியாக 2021ஆம் ஆண்டு மே.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தார்.

இதேவேளை, பங்களாதேஷில் நடைபெறும் டாக்க பிரீமியர் டிவிசன் கிரிக்கெட் தொடரில் (லிஸ்ட் ஏ) சினேபுகுர் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடிய இவர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்கள் மற்றும் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பூர்வாங்க குழாம்

தசுன் ஷானக (தலைவர்), குசல் மெண்டிஸ் (பிரதி தலைவர்), குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், நுவனிது பெர்னாண்டோ, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம, அஷேன் பண்டார, அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, சாமிக கருணாரட்ன, வனிந்து ஹஸரங்க, துஷான் ஹேமன்த, துனித் வெல்லாலகே, லஹிரு குமார, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுசங்க, கசுன் ராஜித, மதீஷ பதிரன, மிலான் ரத்நாயக்க, நுவான் துஷார, பிரமோத் மதுசான், அசித பெர்னாண்டோ, மகீஷ் தீக்ஷன, லக்ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, திமுத் கருணாரத்ன

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<