இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு டெஸ்ட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவின் கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்
இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று(02) முதல் இடம்பெறும் மாகாண மட்ட
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் மாகாண அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியது. இந்த தொடருக்காக நேற்று (01) பயிற்சி வலையில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே திமுத் இவ்வாறு உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
அண்மையில் நிறைவடைந்த மாகாண அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில், திமுத் கருணாரத்ன தம்புள்ளை அணிக்கு தலைமை தாங்கியிருந்தார். எனினும் குறித்த தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்த அவர் ஒரு அரைச் சதத்தை மாத்திரமே பெற்றிருந்தார்.
இந்நிலையில், மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கும் அவர் அதே அணியில் இடம்பெற்றிருந்தார். எனினும், தற்போது ஏற்பட்டுள்ள உபாதையினால் அவர் இத்தொடரிலும், இலங்கை அணி அடுத்து மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் சுற்றுத் தொடரிலும் விளையாட மாட்டார் என நம்பப்படுகின்றது.
டெஸ்ட் தரவரிசையில் 6ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்ட இலங்கை
சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் (ஐ.சி.சி.) வெளியிட்டிருக்கும் ஆண்டின் புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணியால் தனது 6 ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தபோதும் ஒரு தரநில.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கருணாரத்ன இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார். அதன் பின்னர் அவரது காயத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் உரிய முறையில் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது 30 வயதையுடைய இடது கை துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, கடந்த பல வருடங்களாக இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கான முதல் தெரிவாக இருந்து வந்தார். இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 34 என்ற சராசரியுடன் ஓட்டம் பெற்றுள்ளார். எனினும், அவர் இறுதியாக ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைத் சதத்தை மாத்திரமே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க