இலங்கை கிரிக்கெட் அணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்ஹார லொகுஹெட்டிகே சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேகமாக ஓட்டங்களை பெரும் திறன் கொண்ட 36 வயது நிரம்பிய டில்ஹார லொகுஹெட்டிகே இலங்கை அணிக்காக தற்போது வரையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சகலதுறை வீரரான இவர் இலங்கை அணிக்காக 2005ஆம் ஆண்டு ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததோடு 21 ஓட்டங்களை பெற்று இருந்தார்.
அண்மை காலமாக இலங்கை அணியில் உள்வாங்கப்படாத டில்ஹார லொகுஹெட்டிகே தனது சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தாலும் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட உத்தேசித்துள்ளதாக கூறி உள்ளார்.
டில்ஹார லொகுஹெட்டிகே பற்றிய தகவல்கள்
- முழுப் பெயர் – லொகு ஹெட்டிகே தனுஷ்க டில்ஹார
- பிறப்பு – 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03ஆம் திகதி
- பிறந்த இடம் – கொழும்பு
- வயது – 36
- துடுப்பாட்ட பாணி – வலதுகை பின்வரிசை துடுப்பாட்டம்
- பந்துவீச்சு பாணி – வலதுகை மித வேகப்பந்து வீச்சு
- விளையாடும் பாணி – சகலதுறை வீரர்
துடுப்பாட்டத்தில்
- விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 09
- மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 83
- அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 29
- ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 9.22
- விளையாடியுள்ள டி20 போட்டிகள் – 02
- மொத்த டி20 ஓட்டங்கள் – 18
- அதிகபட்ச டி20 ஓட்டம் – 18*
- டி20 துடுப்பாட்ட சராசரி – 18.00
பந்துவீச்சில்
- பந்துவீசிய ஒருநாள் போட்டிகள் – 08
- மொத்த ஒருநாள் விக்கெட்டுகள் – 6
- சிறந்த ஒருநாள் பந்து வீச்சு – 30/2
- ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 43.50
- பந்துவீசிய டி20 போட்டிகள் – 02
- மொத்த டி20 விக்கெட்டுகள் – 2
- சிறந்த டி20 பந்து வீச்சு – 6/2
- டி20 பந்துவீச்சு சராசரி – 15.00
முதல் தர போட்டிகளில் டில்ஹார லொகுஹெட்டிகே 146 போட்டிகளில் விளையாடி 5464 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு 354 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்