இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகே மீது ஐசிசி (ICC) சுமத்தியிருந்த, மூன்று வகையான ஊழல் தடுப்பு குற்றச்சாட்டு, ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டில்ஹார லொக்குஹெட்டிகே மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வீரர்களுக்கு திறமை அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்க திட்டம்
ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் டில்ஹார லொக்குஹெட்டிகேவின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த குற்றம் உறுதிசெய்யப்பட்டு அவருக்கான தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.
பின்னர், இந்த குற்றச்சாட்டுகளை அவருக்கான உரிமைகள் அடிப்படையில், ஐசிசி மூன்று பேர்கொண்ட சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயத்தினை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே இவர், குற்றம் செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கான கடந்தகால தண்டனை தொடரப்படும் நிலையில், மேலதிக தண்டனைகள் குறித்து ஐசிசி அறிவிக்கவில்லை.
- டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீதான குற்றச்சாட்டுகள் :
சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.
சரத்து 2.1.4 – விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்.
சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி குறிப்பிட்ட ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.
இலங்கை தேசிய அணியில் 2005-2013ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடிய டில்ஹார லொக்குஹெட்டிகே, 2 T20I போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<