ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் மூன்று வகையான ஊழல் தடுப்பு சட்டத் தொகுப்பை மீறியதாக இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீது இன்று (13) குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நுவன் சொய்சா மீது ஐ.சி.சி. ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு
ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறி இருப்பதாக இலங்கை
சர்வதேச கிரிக்கெட் (ஐசிசி) வாரியத்தின் சார்பில் ஊழல் தடுப்பு விசாரணைகளை மேற்கொண்ட ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை, டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீது மூன்று வகையான ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளானது கடந்த வருடம் நடைபெற்ற T10 லீக்குடன் தொடர்புடையது எனவும் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உடன் அமுலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட டில்ஹார லொகுஹெட்டிகேவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
- சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.
- சரத்து 2.1.4 – விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்.
- சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி குறிப்பிட்ட ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக மூவரடங்கிய குழு நியமனம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய
டில்ஹார லொகுஹெட்டிகேவின் மீது மேற்குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (13) தொடக்கம் எதிர்வரும் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய அணியில் 2005-2013ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாடிய டில்ஹார லொகுஹெட்டிகே, 2 T20I போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதேவேளை, கடந்த சில மாதங்களில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் நுவான் சொய்சா ஆகியோர் மீது ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க