இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் வீரர் டிலங்க குமார இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்றுக்கொடுத்துள்ளார்.
ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட டிலங்க குமார மொத்தமாக 225 கிலோகிராம் எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.
பெட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டிய இலங்கை!
இவர் ஸ்னெட்ச் முறையில் 105 கிலோகிராம் எடையை தூக்கியதுடன், கிளீன் அண்ட் ஜெக் முறையில் 120 கிலோ எடையை தூக்கியிருந்தார். இதில் கிளீன் அண்ட் ஜெக் முறையில் 137 மற்றும் 141 கிலோகிராம் எடைகளை தூக்கும் முயற்சியை இவர் மேற்கொண்டிருந்தாலும் அது அவருக்கு பயனளிக்கவில்லை.
ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் முதலிடத்தை மலேசிய வீரர் பின் கஸ்டன் பிடித்துக்கொண்டதுடன், இரண்டாவது இடத்தை இந்திய வீரர் சன்கெட் மஹாதேவ் பிடித்துக்கொண்டார். பின் கஸ்டன் மொத்தமாக 249 கிலோகிராம் எடையை தூக்கியிருந்ததுடன், சன்கெட் மஹாதேவ் 248 கிலோகிராம் எடையை தூக்கியிருந்தார்.
Photos – Commonwealth Games 2022 – Day 01
இதேவேளை, ஆண்களுக்கான 61 கிலோகிராம் எடைப்பிரிவில் இலங்கையைச் சேர்ந்த திலங்க பலங்கசிங்க போட்டியிட்டிருந்தார். இவர் தன்னுடையை முதல் முயற்சியில் 100 கிலோகிராம் எடையை துக்கியிருந்த போதும், இரண்டாவது முயற்சியில் 106 கிலோகிராம் எடையை தூக்க முயற்சித்த போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதனால் போட்டியை தொடர முடியாமல் போட்டியிலிருந்து திலங்க பலங்கசிங்க வெளியேறினார்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<