சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதன்படி, இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிறந்த முறையில் பிரகாசித்த ஒருசில வீரர்கள் தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2ஆவது இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 3ஆவது இடத்திலும், இந்திய நட்சத்திர வீரர் புஜாரா 4ஆவது இடத்திலும் நீடிக்கிறனர்.
கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
உலகின் மிகவும் பழமையான சர்வதேச கிரிக்கெட் போட்டித்….
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 104 ஓட்டங்களை விளாசிய இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ஒரு இடம் ஏற்றம் கண்டு துடுப்பாட்ட வீரர்களுக்காக தரப்படுத்தலில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மறுமுனையில் குறித்த போட்டியில் இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் எந்தவொரு வீரரும் குறிப்பிடும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை. எனினும், நிரோஷன் திக்வெல்ல 3 இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தில் உள்ளதுடன் திமுத் கருணாரத்ன(17), தினேஷ் சந்திமால்(23), அஞ்செலோ மெதிவ்ஸ்(24) மற்றும் குசல் மெண்டிஸ்(34) ஆகிய இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். கொல்கத்தா டெஸ்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் சறுக்கி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவின் காஜிசோ ரபாடா ஒரு இடம் முன்னேறி 2ஆவது இடத்திலும், இந்தியாவின் அஷ்வின் 4ஆவது இடத்திலும், இலங்கையின் ரங்கன ஹேரத் 5ஆவது இடத்திலும் இருக்கிறனர். அத்துடன் சுரங்க லக்மால் 22ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
போராட்டத்திற்கு மத்தியில் இந்தியாவுடனான டெஸ்டை சமப்படுத்திய இலங்கை
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20)…
இந்நிலையில், இப்போட்டியில் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய தில்ருவன் பெரேரா, 3 இடங்கள் முன்னேறி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் 22ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 10ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
கொல்கத்தா டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தெரிவான இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் 29ஆவது இடத்திலும் (8 இடம் ஏற்றம்), மொஹமட் ஷமி 18ஆவது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) வகிக்கிறனர்.