மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் சென். லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான நிரோஷன் திக்வெல்ல மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் சானக ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
6ஆவது கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டித் தொடரிலும் பார்படோஸ் டிரைடன்ட்ஸ், கயானா அமேசன் வோரியர்ஸ், ஜமைக்கா தளவாஹ்ஸ், சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ், சென் லூசியா ஸ்டார்ஸ், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்குகொள்கின்றன.
இந்நிலையில் இந்த வருடத்துக்கான வீரர்கள் ஏலம் கடந்த வியாழக்கிழமை லண்டனில் நடைபெற்றது. இதில், 6 அணிகளும் 108 வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்ததுடன், 61 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 47 வீரர்கள் இந்த வருட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் டொலர் நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகையில் பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர், மேற்கிந்திய தீவுகளின் அன்ட்ரூ ரஸல், கிறிஸ் கெய்ல், டுவைன் பிராவோ ஆகியோர் தக்கவைத்துள்ளனர். அதன் பின் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டிலை அடிப்படை விலையான 90 ஆயிரம் டொலர் விலைக்கு பார்படோஸ் டிரைடன்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின அதிரடி ஆட்டக்காரர் லின்டெல் சிம்மன்ஸை 70 ஆயிரம் டொலர்களுக்கு சென் லூசியா ஸ்டார்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
இவ்வாண்டு உள்ளூர் T20 தொடரில் முதல் முறை விக்கெட் வீழ்த்த தவறிய மாலிங்க
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான
இதேநேரம் ஊக்க மருந்து விவகாரத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடாத நட்சத்திர வீரர் அன்ட்ரூ ரஸல் இம்முறை போட்டித் தொடரில் ஜமைக்கா தளவாஹ்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மேலும் சிறப்பு வீரர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த சஹீட் அப்ரிடி (ஜமைக்கா தளவாஹ்ஸ்), ஷுஐப் மலிக் (கயானா அமேசன் வோரியர்ஸ்), எவின் லிவிஸ் (சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ்) மற்றும் கிறிஸ் லைன் (ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்) ஆகிய வீரர்கள் அந்தந்த அணிகளின் உரிமையாளர்களின் தலையீட்டுடன் நேரடியாக உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணிக்காக முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த சந்தீப் லெமிச்சேன், முதற்தடவையாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் வீரர்களுக்கான ஏலத்தில் இடம்பெற்றிருந்ததுடன், அவரை சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணி 5 ஆயிரம் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது.
இதேவேளை, இம்முறை நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் 2 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் இலங்கை அணிக்கு மற்றும் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான குமார் சங்கக்கார ஜமைக்கா தளவாஹ்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார். சங்கா விளையாடும் ஜமைக்கா தளவாஹ்ஸ் அணியில் சங்காவோடு க்ரிஸ் கெயில், எண்டர் ரசல், டெல் ஸ்டெய்ன், ஸகீப் அல் ஹஸன் மற்றும் இமாத் வசீம் ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அத்தோடு இலங்கை அணியின் சகலதுறை வீரர் மற்றும் இரும்பு மனிதன் என்ற புனைப் பெயரைக் கொண்ட திசர பெரேராவும் இந்த வருட பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாடுகிறார். இவர் தென் ஆபிரிக்க டி20 அணித் தலைவரான பெப் டுப்ளசிஸ் தலைமையிலான சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணிக்கு விளையாடுகிறார். இவர் இணைந்துள்ள சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணியில் திசரவோடு லென்டில் சிமன்ஸ், தப்ரிஸ் ஸம்ஸி, பிராட் ஹொட்ஜ், சாமுவேல் பத்ரி, கார்லோஸ் பிராத்வெய்ட் ஆகியோர் முக்கிய வீரர்களாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.
ஏற்கனவெ இன்று நடைபெற்ற போட்டியொன்றில் திசர விளையாடும் சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணி கயானா அமேசான் வோரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஆனால் இந்தப் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணி 1 பந்து மீதமிருக்க 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் திசர 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 20 ஓட்டங்களைப் பெற்றுத் துடுப்பாட்டத்தில் கலக்கினாலும் பந்துவீச்சில் 4 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். அத்தோடு அவரால் விக்கட் ஏதும் கைப்பற்ற முடியவில்லை.
கோல்ட்ஸ் அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று ஆதிக்கம்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் 11
கடந்த வருடம் முதல் இலங்கை அணி பங்கேற்ற டி20 தொடர்களை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இலங்கை அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரான நிரோஷன் திக்வெல்ல, கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த தொடரிலிருந்து அவர் விலகிக் கொண்டார். இந்நிலையில், முதற்தடவையாக இம்முறை கரீபியன் லீக் டி20 தொடரில் சென்.லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று இலங்கை அணியின் மற்றுமொரு அதிரடி சகலதுறை வீரராக அண்மைக்காலமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற 26 வயதான தசுன் சானக்கவும் முதற்தடவையாக கரீபியன் லீக் தொடரில் சென்.லூசியா ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்கும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றலுடன் இவ்வருடத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவுள்ள லங்கன் பிரீமியர் லீக் டி20 தொடரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெறுகின்ற காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால் இலங்கை வீரர்களின் பங்குபற்றலானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.