டயலொக் ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் சம்பியனாக முடிசூடிய ஈகள்ஸ் அணி

240
Dialog Super 7s Final Article

டயலொக் ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் (அணிக்கு எழுவர்) றக்பியின் இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் ஈஸி வுல்வ்ஸ் அணியிடம் 19 – 26 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தபோதிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை மொபிடெல் ஈகள்ஸ் அணி தட்டிச் சென்றது.

கண்டி, நித்தவளை விளையாட்டரங்கிலும் கொழும்பு ரேஸ்கோர்ஸ் அரங்கிலும் என இரண்டு கட்டங்களாக நடாத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுப்பர் செவன்ஸ் றக்பி போட்டிகளில் மொபிடெல் ஈகள்ஸ் அணி இரண்டு தோல்விகளையே தழுவியிருந்தது. எனினும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை மொபிடெல் ஈகள்ஸ் தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் வென்றமை விசேட அம்சமாகும்.

சூப்பர் 7s ரக்பி போட்டிகளில் மொபிடெல் மற்றும் சயன்ஸ் கல்லூரிக்கு வெற்றி

கால் இறுதிப் போட்டியில் எக்செஸ் கிங்ஸ் அணியை 17 – 12 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் அரை இறுதிப் போட்டியில் எட்டிசலாட் பென்தர்ஸ் அணியை 33 – 24 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றிகொண்டதன் மூலம் ஈக்ள்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

மறுபுறத்தில் சொவ்ட்லொஜிக் வொரியர்ஸ் அணியை 24 – 12 என்று புள்ளிகள் அடிப்படையிலும், கார்கில்ஸ் க்ளடியேட்டர்ஸ் அணியை 17 – 10 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றிகொண்டதன் மூலம் ஈஸி வுல்வ்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நட்சத்திர வீரர்கள் நிறைந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டபோது இலங்கை தேசிய அணி மற்றும் ஹெவ்லொக்ஸ் அணி என்பவற்றின் தலைவர் சுதர்ஷன முத்துதான்திரி தலைமையிலான வுல்வ்ஸ் அணியினர் முதலாவது புள்ளிகளைப் பெற்றனர்.  

கென்ய நாட்டவரான நெல்சன் ஓயூ ட்ரை ஒன்றை வைத்து வுல்வ்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும் ஈகள்ஸ் அணியினர் பிஜி நாட்டவரான ஜொசேவா பிலே க்றீன் மூலம் பதிலடி கொடுத்து புள்ளிகள் நிலையை சமப்படுத்தினார்.  

போட்டியின் முதலாவது பாதியின் நடுப்பகுதியில் மொஹமத் அப்சால் முரட்டுத்தனமாக விளையாடியதால் சின் பின்னுக்கு அனுப்பப்பட ஈக்ள்ஸ் அணியினர் 6 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டனர். அதனை சாதகமாக்கிக்கொண்ட வுல்ஸ் அணியினர் தினுஷ சத்துரங்க மூலம் ட்ரை வைத்து அதற்கான மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டனர்.

எவ்வாறாயினும் இடைவேளை நெருங்குகையில் ஜொசேவா பிலே க்றீன் தனது இரண்டாவது ட்ரையை வைக்க, இடைவேளையின்போது புள்ளிகள் நிலையில் ஈகள்ஸ் முன்னிலை பெற்றது.

முதல் பாதி:  மொபிடெல் ஈகள்ஸ் 14 – 12 ஈஸி வுல்வ்ஸ்

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது ஆக்ரோஷத்துடன் விளையாடிய வுல்வ்ஸ் அணியினர் மேலும் ஒரு ட்ரையை சஷான் மொஹமட் மூலம் வைத்தனர். இதனைத் தொடர்ந்து நெல்சன் ஓயூ தனது இரண்டாவது ட்ரையை வைக்க வுல்வ்ஸ் அணி 14 புள்ளிகளால் முன்னிலை பெற்றது.  

இலங்கை ரக்பியில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவு

இதேவேளை, கென்ய அணித் தலைவர் அண்ட்றூ ஆமண்டே கடைசி நேரத்தில் களம்புகுந்து வுல்வ்ஸ் அணியின் பின்களத்தை பலப்படுத்த அவ்வணி 26 – 12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது. எனினும் ஈக்ள்ஸ் அணியினர் வெற்றிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒட்டுமொத்த சம்பியனானது.

முதல் பாதி:  மொபிடெல் ஈகள்ஸ் 26 – 12 ஈஸி வுல்வ்ஸ்  

இந்த சுற்றுப் போட்டியில் அதி சிறந்த ஆற்றல் வெளிப்படுத்திய வீரருக்கான விருது ஈஸி வுல்வ்ஸ் அணித் தலைவர் சுதர்ஷன முத்துதான்திரிக்கு வழங்கப்பட்டது.

கோப்பைக்கான இறுதிப் போட்டியில் 22 – 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் கார்கில் க்ளடியேட்டர்ஸ் அணியை வெற்றிகொண்ட எட்டிசலாட் பென்தர்ஸ் கோப்பைக்கான சம்பியனானது.  

குவலைப் பிரிவில் சொவ்ட்லொஜிக் வொரியர்ஸ் அணியை 36 – 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய எக்செஸ் கிங்ஸ் சம்பியனானது.

கேடயப் பிரவுக்கான இறுதிப் போட்டியில் கெ.பி.எஸ்.எல். ட்ரகன்ஸ் அணியை 28 – 19 என்ற புள்ளிகள் கணக்கில் வோக்கர்ஸ் சி.எம்.எல். வைப்பர்ஸ் அணி வெற்றிகொண்டு சம்பியனானது.