மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ரக்பி சுப்பர் 7’s போட்டிகள் ஜூலை மாதம் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் கண்டி நித்தவள மைதானத்தில் நடைபெறவுள்ளன. பின்னர் அதன் இரண்டாம் கட்டப் போட்டிகள் 15ஆம், 16ஆம் திகதிகளில் கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இலங்கை ரக்பி சம்மேளனம் மற்றும் பிரதான அனுசரணையாளரான டயலொக் அக்சியாடா ஆகியன இணைந்து நடாத்தும் இப்போட்டியில் கடந்த வருடம் பங்குபற்றிய 8 அணிகளான அக்சஸ் கிங்ஸ், காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ், எடிசலாட் பந்தர்ஸ், EZY வூல்வ்ஸ், KBSL ட்ரகன்ஸ், சொப்ட்லொஜிக் வொரியர்ஸ், மொபிடெல் ஈகல்ஸ் மற்றும் வாக்கர்ஸ் வைப்பர்ஸ் ஆகிய அணிகள் இவ்வருடமும் போட்டியிடுகின்றன.
ஜனாதிபதிக் கிண்ண இறுதிப் போட்டியில் புனித ஜோசப் கல்லூரியுடன் மோதவுள்ள இசிபதன
புனித பேதுரு கல்லூரிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மைலோ…
இது தொடர்பிலான ஊடக சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. அதன்போது கண்டியில் போட்டிகள் நடைபெறவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த தொலைத்தொடர்பாடல்துறை அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ
“கடந்த வருடம் மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை ரக்பியின் திறமையை வெளிக்கொண்டு வந்தோம். இவ்வருடம் போட்டிகளை கண்டியில் நடாத்த உள்ளோம். நிதிப் பற்றாக்குறையின் காரணமாக கண்டியில் இரவு நேர போட்டிகள் இடம்பெறாது“ எனத் தெரிவித்தார்.
இவ்வருடம் பெண்களுக்கான போட்டிகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பிரிவில் நான்கு அணிகள் பங்குபெறவுள்ளன. கடந்த காலங்களில் இலங்கை மகளிர் ரக்பி அணி சிறப்பாக செயற்பட்டு வருவதுடன், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே மகளிர் பிரிவை அறிமுகம் செய்ததாக அமைச்சர் ஹரின் மேலும் தெரிவித்தார்.
மகளிர் பிரிவில் இலங்கை இராணுவப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் CR&FC கழகங்கள் பங்குபற்றவுள்ளன.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இப்போட்டியை பொறுப்பேற்று நடாத்துவது குறித்து கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “ஹரின் பெர்னாண்டோ அவர்களே இப் போட்டி ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தார். கடந்த வருடம் மிகச் சிறப்பாக காணப்பட்டது. இவ் வருடம் மேலும் சிறப்பாக நடாத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
கால்பந்தின் வாசனையை முற்றிலும் மறந்துள்ள கண்டி
ஒரு காலத்தில் திறமைமிக்க கால்பந்து வீரர்கள் பலரை உருவாக்கித் தந்த கண்டி நகரம்…
இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவரான அசங்க செனவிரத்ன அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையில், இப்போட்டியானது உலக ரக்பி சம்மேளனம் மற்றும் ஆசிய ரக்பி சம்மேளனம் என்பவற்றின் பாராட்டைப் பெற்றுள்ளதாகவும், இப்போட்டித் தொடர் 7s போட்டிகளுக்கு ஒரு முன்மாதிரியாக காணப்படுகிறது என அச் சம்மேளனங்கள் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இப் போட்டியின் அட்டவணையை அறிவித்தார். அதன்படி, முதலாம் நாள் 8 அணிகளும் முதல் சுற்றில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். இரண்டாம் நாளில் நொக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, கப், பிளேட், போல் மற்றும் ஷீல்ட் ஆகிய கிண்ணங்களுக்காக அணிகள் மோதும்.
மேலும், அணிகள் சென்ற வருடம் விளையாடிய வீரர் ஒருவரை மீண்டும் தன்னிடம் வைத்துக்கொள்ள முடியும். 3 வெளிநாட்டு வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு அணியும் ‘A’ தர வீரர்களில் இருந்து ஒருவரை சேர்த்துக்கொள்ளலாம் மேலும் ‘B’ மற்றும் ‘C’ பிரிவுகளில் இருந்து தலா 4 வீரர்களை சேர்த்துக்கொள்ள முடிவதோடு, ‘D’ தர வீரர்களில் இருந்து 2 வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும். 23 வயதிற்குட்பட்ட வீரர் ஒருவர் கட்டாயம் களத்தில் விளையாட வேண்டும் என்பதோடு, ஒரே நேரத்தில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களத்தில் விளையாடலாம்.
மேலே கூறப்பட்ட 8 அணிகளுக்கு மேலதிகமாக, 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.