இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கில் ஒருநாள் தொடரில் இன்றைய தினம் (10) நடைபெற்ற இரண்டு போட்டிகளில் கண்டி மற்றும் தம்புள்ள அணிகள் வெற்றிகளை பதிவுசெய்துள்ளன.
தொடர்ச்சியாக தோல்விகளை தழுவிவந்த தம்புள்ள அணி, இன்றைய போட்டியில் துவிந்து திலகரட்னவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் முதல் வெற்றியை சுவைத்ததுடன், கண்டி அணியானது தங்களுடைய 5வது வெற்றியை பதிவுசெய்து, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
T20I உலகக் கிண்ண சம்பியன்களுக்கு சவால் தருமா இலங்கை??
காலி எதிர் தம்புள்ள
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், தொடர் தோல்விகளை தழுவிவந்த தம்புள்ள அணி, தங்களுடைய முதல் வெற்றியினை இன்று பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி பந்துவீசிய தம்புள்ள அணிக்காக துவிந்து திலகரட்ன சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்த, காலி அணியால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. எனவே, 33.4 ஓவர்கள் நிறைவில் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
காலி அணியின் ஹிமாஷ லியனகே மாத்திரம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் துவிந்து திலகரட்ன 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அஷான் பிரியன்ஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ள அணி எப்போதும் போன்று, துடுப்பாட்டத்தில் தடுமாறத்தொடங்கியது. 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
எவ்வாறாயினும், அஷான் பிரியன்ஜன் பெற்றுக்கொடுத்த 31 ஓட்டங்கள் மற்றும் துஷான் ஹேமந்த (28 ஓட்டங்கள்), சமீர சந்தமாலின் (26 ஓட்டங்கள்) இணைப்பாட்டத்தின் உதவியுடன் 24.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து தம்புள்ள அணி வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில், இதன்மூலம், போட்டித்தொடரில் தங்களுடைய ஏழாவது போட்டியில் விளையாடி தம்புள்ள அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pabasara Waduge | b | 12 | 16 | 0 | 0 | 75.00 |
Ashan Randika | c & b | 13 | 19 | 0 | 0 | 68.42 |
Priyamal Perera | c & b | 16 | 35 | 0 | 0 | 45.71 |
Dhananjaya Lakshan | run out () | 12 | 12 | 0 | 0 | 100.00 |
Himasha Liyanage | c & b | 29 | 40 | 0 | 0 | 72.50 |
Vishad Randika | c & b | 10 | 25 | 0 | 0 | 40.00 |
Jehan Danie | b | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Kavishka Anjula | b | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Akila Dananjaya | c & b | 10 | 25 | 0 | 0 | 40.00 |
Nimesh Vimukthi | c & b | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Chalana de Silva | not out | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Extras | 19 (b 0 , lb 4 , nb 0, w 15, pen 0) |
Total | 125/10 (33.4 Overs, RR: 3.71) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 5 | 1 | 15 | 1 | 3.00 | |
Lahiru Samarakoon | 3 | 0 | 17 | 0 | 5.67 | |
Anuk Fernando | 5 | 0 | 30 | 1 | 6.00 | |
Dilum Sudeera | 10 | 2 | 21 | 4 | 2.10 | |
Lakshan Sandakan | 6 | 0 | 26 | 0 | 4.33 | |
Ashan Priyanjan | 4 | 0 | 10 | 2 | 2.50 | |
Sameera Sandamal | 0.4 | 0 | 2 | 1 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c & b | 14 | 11 | 0 | 0 | 127.27 |
Lasith Abeyrathne | c & b | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Pavan Rathnayake | c & b | 7 | 19 | 0 | 0 | 36.84 |
Ashan Priyanjan | lbw b | 31 | 31 | 0 | 0 | 100.00 |
Lahiru Samarakoon | b | 13 | 23 | 0 | 0 | 56.52 |
Sameera Sandamal | not out | 26 | 28 | 0 | 0 | 92.86 |
Dushan Hemantha | not out | 28 | 34 | 0 | 0 | 82.35 |
Extras | 4 (b 0 , lb 1 , nb 1, w 2, pen 0) |
Total | 126/5 (24.5 Overs, RR: 5.07) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dhananjaya Lakshan | 2 | 0 | 16 | 1 | 8.00 | |
Kavishka Anjula | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Nimesh Vimukthi | 6.5 | 1 | 44 | 1 | 6.77 | |
Chalana de Silva | 7 | 0 | 29 | 1 | 4.14 | |
Akila Dananjaya | 5 | 0 | 18 | 1 | 3.60 |
கண்டி எதிர் கொழும்பு
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், ஓசத பெர்னாண்டோ மற்றும் சஹான் ஆராச்சிகேவின் 128 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
இளம் துடுப்பாட்ட வீரரான நுவனிந்து பெர்னாண்டோ தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தது மாத்திரமின்றி, இந்த போட்டியில் அபார சதமொன்றை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளித்தார். நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சம்மு அஷான் ஆகியோர் 4வது விக்கெட்டுக்காக 109 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
இருப்பினும், இறுதிநேரத்தில் விக்கெட்டுகளை தவறவிட்டதால், கொழும்பு அணி 49.3 ஓவர்கள் நிறைவில், 271 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. நுவனிந்து பெர்னாண்டோ ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை குவித்ததுடன், சம்மு அஷான் 62 ஓட்டங்களையும், திமுத்
கருணாரத்ன 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் புலின தரங்க மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய கண்டி அணியின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் சிறிய பங்களிப்பை வழங்கிய போதும், நான்காவது விக்கெட்டுக்கான ஓசத பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகேவின் இணைப்பாட்டம் மற்றும் புலின தரங்க மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான ஐந்தாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டங்களின் உதவியுடன் 48.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து கண்டி அணி வெற்றியிலக்கை அடைந்தது.
ஓசத பெர்னாண்டோ அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களை பெற, சஹான் ஆராச்சிகே 64 ஓட்டங்களையும், புலின தரங்க ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தநிலையில், தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்று 24 புள்ளிகளை பெற்றுள்ள கண்டி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் ஜப்னா அணி 18 புள்ளிகளுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Gimhan | c & b | 18 | 13 | 0 | 0 | 138.46 |
Dimuth Karunaratne | st b | 29 | 40 | 0 | 0 | 72.50 |
Nuwanidu Fernando | c & b | 112 | 133 | 0 | 0 | 84.21 |
Nipun Dananjaya | lbw b | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Sammu Ashan | c & b | 62 | 70 | 0 | 0 | 88.57 |
Ashen Bandara | c & b | 20 | 17 | 0 | 0 | 117.65 |
Lahiru Madushanka | run out () | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Kalana Perera | c & b | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Tharindu Ratnayaka | run out () | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | not out | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Mohammad Dilshad | c & b | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Extras | 17 (b 0 , lb 3 , nb 1, w 13, pen 0) |
Total | 271/10 (49.3 Overs, RR: 5.47) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ashian Daniel | 10 | 1 | 39 | 1 | 3.90 | |
Asitha Fernando | 9.3 | 0 | 41 | 3 | 4.41 | |
Nipun Ransika | 7 | 0 | 55 | 0 | 7.86 | |
Lasith Embuldeniya | 10 | 0 | 51 | 1 | 5.10 | |
Pulina Tharanga | 10 | 0 | 66 | 3 | 6.60 | |
Pramud Hettiwatte | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Sahan Arachchige | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c & b | 16 | 15 | 0 | 0 | 106.67 |
Lahiru Udara | c & b | 34 | 54 | 0 | 0 | 62.96 |
Sachindu Colombage | c & b | 25 | 32 | 0 | 0 | 78.12 |
Oshada Fernando | not out | 85 | 94 | 0 | 0 | 90.43 |
Sahan Arachchige | c & b | 64 | 76 | 0 | 0 | 84.21 |
Pulina Tharanga | not out | 32 | 22 | 0 | 0 | 145.45 |
Extras | 16 (b 4 , lb 4 , nb 0, w 8, pen 0) |
Total | 272/4 (48.5 Overs, RR: 5.57) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 7 | 0 | 49 | 0 | 7.00 | |
Mohammad Dilshad | 8.5 | 0 | 55 | 1 | 6.47 | |
Tharindu Ratnayaka | 8 | 0 | 49 | 0 | 6.12 | |
Lahiru Madushanka | 8 | 2 | 34 | 2 | 4.25 | |
Prabath Jayasuriya | 10 | 0 | 41 | 0 | 4.10 | |
Sammu Ashan | 7 | 0 | 36 | 1 | 5.14 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<