இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற டயலொக் நெஷனல் சுபர் லீக் ஒருநாள் தொடரின் நேற்றைய (08) போட்டிகளில் கண்டி மற்றும் கொழும்பு அணிகள் வெற்றியினைப் பதிவு செய்திருந்தன.
தம்புள்ளை எதிர் கொழும்பு
கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பித்திருந்த இந்தப் போட்டியில் கொழும்பு, தம்புள்ளை அணியினை 107 ஓட்டங்களால் வீழ்த்தியது.
>> தனன்ஜய டி சில்வாவின் சதத்துடன் ஜப்னா அணிக்கு இலகு வெற்றி
முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணித்தலைவர் மினோத் பானுக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கொழும்பு அணிக்கு வழங்கியிருந்தார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது. கொழும்பு அணிக்காக இளம் துடுப்பாட்டவீரர்களான நுவனிது பெர்னாண்டோ மற்றும் சித்தார கிம்ஹான் ஆகியோர் சதங்களை விளாசினர்.
இதில் List A போட்டிகளில் கன்னி சதம் பெற்ற சித்தார கிம்ஹான் 104 பந்துகளுக்கு 13 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில் List A போட்டிகளில் கன்னி சதம் பெற்ற மற்றுமொரு வீரரான நுவனிது பெர்னாண்டோ வெறும் 82 பந்துகளில் 7 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 100 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை அணி, ஆரம்பத்தில் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை தடுமாறியது. எனினும், அவ்வணிக்கு மத்திய வரிசை வீரர்களான சதீர சதமல் மற்றும் லசித் அபேய்ரத்ன ஆகியோர் அரைச்சதம் பெற்று போராடினர். எனினும், இந்த வீரர்களினது போராட்டமும் வீணாக தம்புள்ளை அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 210 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
கொழும்பு அணியின் வெற்றியினை கலன பெரேரா மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும், மொஹமட் டில்சாட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் உறுதி செய்திருந்தனர்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Gimhan | lbw b | 110 | 104 | 0 | 0 | 105.77 |
Nipun Dananjaya | c & b | 47 | 74 | 0 | 0 | 63.51 |
Nuwanidu Fernando | c & b | 100 | 81 | 0 | 0 | 123.46 |
Sammu Ashan | b | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Roshen Silva | c & b | 10 | 13 | 1 | 0 | 76.92 |
Ashen Bandara | c & b | 24 | 21 | 0 | 0 | 114.29 |
Lahiru Madushanka | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Kalana Perera | not out | 12 | 7 | 0 | 0 | 171.43 |
Extras | 11 (b 0 , lb 4 , nb 1, w 6, pen 0) |
Total | 317/6 (50 Overs, RR: 6.34) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 8 | 0 | 53 | 0 | 6.62 | |
Lahiru Samarakoon | 7 | 0 | 41 | 2 | 5.86 | |
Sameera Sandamal | 8 | 0 | 46 | 1 | 5.75 | |
Amshi De Silva | 4 | 0 | 40 | 0 | 10.00 | |
Lakshan Sandakan | 3 | 0 | 19 | 0 | 6.33 | |
Ashan Priyanjan | 3 | 0 | 11 | 0 | 3.67 | |
Duvindu Tillakaratne | 10 | 0 | 47 | 0 | 4.70 | |
Dushan Hemantha | 7 | 0 | 56 | 3 | 8.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c & b | 9 | 18 | 0 | 0 | 50.00 |
Gayan Maneeshan | c & b | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Lasith Abeyrathne | c & b | 57 | 77 | 0 | 0 | 74.03 |
Ashan Priyanjan | c & b | 9 | 5 | 0 | 0 | 180.00 |
Dushan Hemantha | c & b | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Sameera Sandamal | c & b | 57 | 91 | 0 | 0 | 62.64 |
Lahiru Samarakoon | c & b | 34 | 32 | 0 | 0 | 106.25 |
Duvindu Tillakaratne | c & b | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Amshi De Silva | b | 12 | 13 | 0 | 0 | 92.31 |
Lakshan Sandajan | c & b | 7 | 14 | 0 | 0 | 50.00 |
Vishwa Fernando | not out | 1 | 18 | 0 | 0 | 5.56 |
Extras | 17 (b 0 , lb 4 , nb 0, w 13, pen 0) |
Total | 210/10 (48.3 Overs, RR: 4.33) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 9 | 0 | 30 | 3 | 3.33 | |
Mohammad Dilshad | 10 | 1 | 45 | 2 | 4.50 | |
Prabath Jayasuriya | 8 | 0 | 28 | 0 | 3.50 | |
Lahiru Madushanka | 8.3 | 0 | 50 | 3 | 6.02 | |
Sammu Ashan | 2 | 0 | 7 | 0 | 3.50 | |
Tharindu Ratnayaka | 10 | 0 | 42 | 1 | 4.20 | |
Ashen Bandara | 1 | 0 | 4 | 0 | 4.00 |
கண்டி எதிர் ஜப்னா
தம்புள்ளையில் நடைபெற்றிருந்த ஜப்னா அணிக்கு எதிரான போட்டியில், கண்டி 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்டிருந்த ஜப்னா அணி, மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
>> பாகிஸ்தான் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை
ஜப்னா அணியின் துடுப்பாட்டத்தில் 31 ஓட்டங்கள் பெற்ற சதீர சமரவிக்ரம தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருக்க, கண்டி அணிக்காக நெஷனல் சுபர் லீக்கில் முதல் முறையாக களமிறங்கிய சுழல்பந்துவீச்சாளரான அஷைன் டேனியல் வெறும் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, இரண்டாவது முறையாக List A போட்டிகளில் 5 விக்கெட்டுக்கள் என்கிற பந்துவீச்சுப் பிரதியினை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி அணி, 27 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 110 ஓட்டங்களை எடுத்து போட்டியில் இலகு வெற்றியினைப் பதிவு செய்தது. கண்டி அணியின் வெற்றிக்கு பக்கபலமாக காணப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல 45 ஓட்டங்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadeera Samarawickrama | run out () | 31 | 30 | 0 | 0 | 103.33 |
Lahiru Thirimanne | lbw b | 8 | 15 | 0 | 0 | 53.33 |
Damitha Silva | c & b | 12 | 29 | 0 | 0 | 41.38 |
Dhananjaya de Silva | st b | 9 | 15 | 0 | 0 | 60.00 |
Santhush Gunathilake | c & b | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ishan Jayaratne | c & b | 13 | 45 | 0 | 0 | 28.89 |
Nimanda Madushanka | lbw b | 10 | 11 | 0 | 0 | 90.91 |
Ravindu Fernando | st b | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Pramod Madushan | c & b | 11 | 23 | 0 | 0 | 47.83 |
Sadeera Samarawickrama | not out | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Nuwan Pradeep | c & b | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Extras | 10 (b 0 , lb 4 , nb 1, w 5, pen 0) |
Total | 109/10 (30.2 Overs, RR: 3.59) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 7 | 1 | 24 | 0 | 3.43 | |
Nipun Ransika | 4 | 0 | 21 | 0 | 5.25 | |
Lasith Embuldeniya | 7 | 0 | 19 | 1 | 2.71 | |
Ashian Daniel | 6.2 | 0 | 27 | 5 | 4.35 | |
Pulina Tharanga | 5 | 1 | 11 | 1 | 2.20 | |
Sahan Arachchige | 1 | 0 | 3 | 2 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | st b | 45 | 34 | 0 | 0 | 132.35 |
Lahiru Udara | run out () | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Kaveeshka Anjula | c & b | 11 | 14 | 0 | 0 | 78.57 |
Oshada Fernando | c & b | 5 | 12 | 0 | 0 | 41.67 |
Sahan Arachchige | not out | 20 | 57 | 0 | 0 | 35.09 |
Pulina Tharanga | c & b | 7 | 16 | 0 | 0 | 43.75 |
Pramud Hettiwatte | not out | 9 | 22 | 0 | 0 | 40.91 |
Extras | 10 (b 0 , lb 0 , nb 1, w 9, pen 0) |
Total | 110/5 (27 Overs, RR: 4.07) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ishan Jayaratne | 6 | 1 | 31 | 0 | 5.17 | |
Pramod Madushan | 5 | 1 | 15 | 1 | 3.00 | |
Dhananjaya de Silva | 6 | 0 | 27 | 1 | 4.50 | |
Ravindu Fernando | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
Nuwan Pradeep | 7 | 1 | 19 | 2 | 2.71 | |
Santhush Gunathilake | 2 | 0 | 10 | 0 | 5.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<