இலங்கை கிாிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டயலொக் தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் கொண்ட போட்டித்தொடரின் இன்றைய போட்டிகளில் ஜப்னா அணியை தம்புள்ள அணி எதிர்கொண்டதுடன், காலி அணியை கொழும்பு அணி எதிர்கொண்டது.
இதில் தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியை ஜப்னா அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டதுடன், கொழும்பு அணிக்கு எதிரான போட்டியை காலி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது.
>> பாகிஸ்தான் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை
ஜப்னா எதிர் தம்புள்ள
பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் தனன்ஜய டி சில்வா இந்த தொடரில் தன்னுடைய முதல் சதத்தை பதிவுசெய்ய ஜப்னா அணி இலகுவான வெற்றியினை பதிவுசெய்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணிக்கு, ஏனைய வீரர்கள் சறுக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், தனன்ஜய டி சில்வா சதமடித்து அசத்தியிருந்தார்.
இவர், 120 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 101 ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் சந்துஷ் குணதிலக்க 39 ஓட்டங்களையும், ரவிந்து பெர்னாண்டோ 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், லஹிரு சமரகோன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணிக்கு லசித் அபேரத்ன 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து நிதானமாக ஓட்டங்களை குவித்தாலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் 101 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தம்புள்ள அணி தடுமாறியது.
இவ்வாறான நிலையில், சமீர சந்தமல் 46 ஓட்டங்களையும், துவிந்து திலகரட்ன 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுவளித்தனர். இருப்பினும் தம்புள்ள அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தம்புள்ள அணியானது விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஜப்னா அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sadeera Samarawickrama | lbw b | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Lahiru Thirimanne | c & b | 8 | 17 | 0 | 0 | 47.06 |
Damitha Silva | c & b | 7 | 15 | 0 | 0 | 46.67 |
Dhananjaya de Silva | c & b | 101 | 120 | 0 | 0 | 84.17 |
Santhush Gunathilake | c & b | 39 | 57 | 0 | 0 | 68.42 |
Ishan Jayaratne | b | 20 | 17 | 0 | 0 | 117.65 |
Ravindu Fernando | b | 37 | 41 | 0 | 0 | 90.24 |
Nimanda Madushanka | run out () | 7 | 4 | 0 | 0 | 175.00 |
Pramod Madushan | not out | 17 | 13 | 0 | 0 | 130.77 |
Dilum Sudeera | not out | 12 | 10 | 0 | 0 | 120.00 |
Extras | 17 (b 0 , lb 8 , nb 0, w 9, pen 0) |
Total | 266/8 (50 Overs, RR: 5.32) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 10 | 1 | 43 | 1 | 4.30 | |
Lahiru Samarakoon | 10 | 1 | 61 | 4 | 6.10 | |
Duvindu Tillakaratne | 8 | 0 | 46 | 0 | 5.75 | |
Dushan Hemantha | 10 | 0 | 46 | 2 | 4.60 | |
Lakshan Sandakan | 8 | 0 | 46 | 0 | 5.75 | |
Sonal Dinusha | 4 | 0 | 16 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c & b | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Gayan Maneeshan | c & b | 22 | 28 | 0 | 0 | 78.57 |
Lasith Abeyrathne | c & b | 35 | 50 | 0 | 0 | 70.00 |
Dushan Hemantha | c & b | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Sonal Dinusha | c & b | 9 | 11 | 0 | 0 | 81.82 |
Pavan Rathnayake | c & b | 13 | 31 | 0 | 0 | 41.94 |
Sameera Sandamal | st b | 46 | 54 | 0 | 0 | 85.19 |
Lahiru Samarakoon | c & b | 7 | 11 | 0 | 0 | 63.64 |
Duvindu Tillakaratne | c & b | 42 | 69 | 0 | 0 | 60.87 |
Lakshan Sandajan | not out | 11 | 20 | 0 | 0 | 55.00 |
Vishwa Fernando | not out | 7 | 12 | 0 | 0 | 58.33 |
Extras | 14 (b 1 , lb 7 , nb 0, w 6, pen 0) |
Total | 215/9 (50 Overs, RR: 4.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dhananjaya de Silva | 1 | 0 | 1 | 0 | 1.00 | |
Ishan Jayaratne | 7 | 0 | 25 | 2 | 3.57 | |
Nuwan Pradeep | 7 | 0 | 40 | 3 | 5.71 | |
Pramod Madushan | 7 | 1 | 30 | 0 | 4.29 | |
Santhush Gunathilake | 4 | 0 | 9 | 1 | 2.25 | |
Dilum Sudeera | 10 | 1 | 54 | 0 | 5.40 | |
Nimanda Madushanka | 4 | 1 | 19 | 1 | 4.75 | |
Damitha Silva | 10 | 0 | 29 | 2 | 2.90 |
காலி எதிர் கொழும்பு
தம்புள்ள சர்வதேச கிரிக்டெ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், காலி அணியின் 9ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கவிஷ்க அஞ்சுலவின் அபாரமான ஆட்டத்தின் உதவியுடன் கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் காலி அணி வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை காட்டிய நிலையில், 103 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், தனியாளாக ஓட்டங்களை குவித்த கவிஷ்க அஞ்சுல ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 73 பந்துகளுக்கு 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
மறுமுனையில் இவருக்கு உதவியாக அகில தனன்ஜய 22 ஓட்டங்களையும், சலன டி சில்வா 27 ஓட்டங்களையும் பெற, காலி அணி 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. கொழும்பு அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க வெறும் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு அணிக்காக திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு மதுஷங்க போன்ற வீரர்கள் பிரகாசிப்புக்களை வெளிப்படுத்தியிருந்த போதும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 45.5 ஓவர்கள் நிறைவில் 181 ஓட்டங்களுககு சகல விக்கெட்டுகளையும் இழந்து கொழும்பு தோல்வியை சந்தித்தது.
அதிகபட்சமாக லஹிரு மதுஷங்க 43 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சில் சலன டி சில்வா 3 விக்கெட்டுகளையும், பிரியமல் பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எனவே, இந்த போட்டியில் வெற்றிபெற்ற காலி அணி புள்ளிப்பட்டியலில், 13 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதுடன், கொழும்பு அணி 9 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ashan Randika | c & b | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Pabasara Waduge | lbw b | 16 | 25 | 0 | 0 | 64.00 |
Dhananjaya Lakshan | c & b | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Priyamal Perera | c & b | 13 | 35 | 0 | 0 | 37.14 |
Himasha Liyanage | c & b | 5 | 21 | 0 | 0 | 23.81 |
Mohammad Shamaaz | c & b | 20 | 34 | 0 | 0 | 58.82 |
Jehan Danie | st b | 20 | 25 | 0 | 0 | 80.00 |
Nimesh Vimukthi | c & b | 9 | 18 | 0 | 0 | 50.00 |
Kavishka Anjula | not out | 75 | 73 | 0 | 0 | 102.74 |
Akila Dananjaya | c & b | 22 | 26 | 0 | 0 | 84.62 |
Chalana de Silva | not out | 27 | 30 | 0 | 0 | 90.00 |
Extras | 13 (b 0 , lb 4 , nb 3, w 6, pen 0) |
Total | 225/9 (49.1 Overs, RR: 4.58) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kalana Perera | 10 | 0 | 46 | 2 | 4.60 | |
Himesh Ramanayake | 9 | 0 | 51 | 2 | 5.67 | |
Lahiru Madushanka | 9.1 | 4 | 18 | 2 | 1.98 | |
Prabath Jayasuriya | 6 | 1 | 20 | 1 | 3.33 | |
Tharindu Ratnayaka | 10 | 2 | 64 | 2 | 6.40 | |
Sammu Ashan | 5 | 0 | 22 | 1 | 4.40 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sithara Gimhan | c & b | 7 | 8 | 0 | 0 | 87.50 |
Dimuth Karunaratne | c & b | 42 | 58 | 0 | 0 | 72.41 |
Nuwanidu Fernando | lbw b | 7 | 9 | 0 | 0 | 77.78 |
Sammu Ashan | run out () | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Nipun Dananjaya | lbw b | 26 | 31 | 0 | 0 | 83.87 |
Ashen Bandara | c & b | 17 | 35 | 0 | 0 | 48.57 |
Lahiru Madushanka | c & b | 43 | 56 | 0 | 0 | 76.79 |
Tharindu Ratnayaka | c & b | 16 | 37 | 0 | 0 | 43.24 |
Himesh Ramanayake | b | 9 | 26 | 0 | 0 | 34.62 |
Kalana Perera | c & b | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Prabath Jayasuriya | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 13 (b 4 , lb 0 , nb 0, w 9, pen 0) |
Total | 181/10 (45.5 Overs, RR: 3.95) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dhanajaya de silva | 3 | 0 | 16 | 0 | 5.33 | |
Kavishka Anjula | 8 | 1 | 33 | 1 | 4.12 | |
Akila Dananjaya | 9 | 2 | 30 | 1 | 3.33 | |
Nimesh Vimukthi | 8 | 0 | 33 | 1 | 4.12 | |
Priyamal Perera | 3 | 0 | 9 | 2 | 3.00 | |
Chalana de Silva | 8.5 | 1 | 21 | 0 | 2.47 | |
Jehan Danie | 6 | 0 | 29 | 1 | 4.83 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<