இலங்கையில் இடம்பெறும் முதல்தர ரக்பி போட்டியான டயலொக் ரக்பி லீக்கின் இரண்டாம் கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. எனவே அனைத்து அணிகளும் தீர்மானம் மிக்க இந்த சுற்றை வெற்றியுடன் ஆரம்பிக்க காத்திருக்கின்றன.
தரவரிசையில் முதலாம் நிலையிலுள்ள ஹெவலொக் அணி இறுதி நிலையிலுள்ள CH&FC அணியுடன் 29ஆம் திகதி மோதவுள்ளது. 30ஆம் திகதி கடற்படை அணி பொலிஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், அதே தினத்தில் CR&FC அணி விமானப்படை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 31ஆம் திகதி இடம்பெறும் கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் இராணுவப்படை அணிகளுக்கிடையிலான போட்டியுடன் இவ்வாரப் போட்டிகள் நிறைவடையும்.
இந்த பருவகாலப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஹெவலொக் அணி கடந்த போட்டியில் முதன்முறையாக கண்டி விளையாட்டுக் கழகத்துடன் தோல்வியை தழுவியது. எனினும் மீண்டும் தனது வெற்றியோட்டத்தை தொடரும் நோக்கில் ஹெவலொக் அணி, மோசமான ஆட்டத்தின் காரணமாக தடுமாறி வரும் CH&FC அணியுடனான போட்டியில் இவ்வாரம் களமிறங்கவுள்ளது.
முதற் சுற்று போட்டி முடிவு : ஹெவலொக்ஸ் 48 – 05 CH&FC
கவனிக்கத்தக்க வீரர்கள்
தரவரிசையில் முதலாம் இடத்தை ஹெவலொக் அணியிடமிருந்து தட்டிப்பறிக்கும் நோக்குடன் கடற்படை அணி களமிறங்கவுள்ளது. இதேவேளை முதற்கட்ட போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அணி, இச்சுற்றில் முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இப்போட்டிக்குள் பிரவேசிக்கின்றது.
முதற் சுற்று போட்டி முடிவு: கடற்படை அணி 29 – 08 பொலிஸ் அணி
கவனிக்கத்தக்க வீரர்கள்
கடந்த பருவகாலத்தில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட திலின வீரசிங்க இம்முறை பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார். எனினும் முதற்கட்ட போட்டிகளில் குறிப்பிட்டுக் கூறும் வகையில் திறமையை வெளிக்காட்டாத போதிலும், கடற்படை அணியின் சம்பியன் கனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் இவரின் பங்களிப்பு அத்தியாவசியமானதாக இருக்கும்.
முதற்கட்ட போட்டிகளில் பிரபல அணிகளுக்கு பலத்த சவாலாக அமைந்த போதிலும், விமானப்படை அணி தனது இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி விறுவிறுப்பானதொன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதற் சுற்று போட்டி முடிவு: CR&FC 57 – 20 விமானப்படை அணி
கவனிக்கத்தக்க வீரர்கள்
நடப்பு சம்பியனான கண்டி அணி தனது பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் இரண்டாம் கட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, சிறப்பாக விளையாடிய போதிலும் துரதிஷ்டவசமாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள இராணுவ அணி, கண்டி அணிக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலே களமிறங்கவுள்ளது.
முதற் சுற்று போட்டி முடிவு: கண்டி கழகம் 34 – 10 இராணுவ அணி
கவனிக்கத்தக்க வீரர்கள்