முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 9வது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (13) நிறைவுக்கு வந்தன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில், தொடர் வெற்றிகளை குவித்துவந்த கண்டி விளையாட்டுக் அணி இந்த பருவகாலத்தில் தங்களுடைய முதல் தோல்வியினை இராணுவப்படை அணியிடம் சந்தித்துள்ளது.
அபார வெற்றிகளுடன் வருடத்தை ஆரம்பித்துள்ள கண்டி, ஹெவ்லொக் அணிகள்
இலங்கையில் உள்ள முதற்தர றக்பி அணிகளுக்கு இடையிலான….
இந்நிலையில், இவ்வார போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் CH&FC, ஹெவ்லொக் மற்றும் விமானப்படை அணிகள் தங்களுடைய வெற்றிகளை பதிவுசெய்துள்ளன. இதன்படி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் இதோ…
CH&FC எதிர் CR&FC
CH&FC மற்றும் CR&FC அணிகளுக்கு இடையில் கடந்த 12ம் திகதி கொழும்பு குதிரைப்பந்தய திடல் சர்வதேச அரஙகில் நடைபெற்ற இந்தப் போட்டியில், CH&FC அணி 23 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
போட்டியின் முதற்பாதியில் 16-05 என்ற முன்னிலையை பெற்றுக்கொண்ட CH&FC அணி, இரண்டாவது பாதியிலும் சிறப்பாக ஆடி 33-10 என வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் CH&FC அணி 4 ட்ரைகள், 2 கன்வேர்சன்கள் மற்றும் 3 பெனால்டிகளுடன் புள்ளிகளை அதிகரித்துக்கொள்ள, CR&FC அணி 2 ட்ரைகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
முடிவு – CH&FC 33-10 CR&FC
விமானப்படை SC எதிர் பொலிஸ் SC
ரத்மலானையில் நடைபெற்ற விமானப்படை மற்றும் பொலிஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில் 16-07 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படை அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
குறைந்த புள்ளிகளுடன் முடிவுக்கு வந்த இந்தப் போட்டியின் முதற்பாதியில் இரண்டு அணிகளும் சிறப்பாக ஆட, 08-07 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப்படை அணி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பொலிஸ் அணி புள்ளிகளை பெறத் தவறிய நிலையில், விமானப்படை அணி 09 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிக்கண்டது.
முடிவு – விமானப்படை SC 16-07 பொலிஸ் SC
அகால மரணமடைந்த இளம் ரக்பி வீரர்
CR & FC கழகத்தின் முன்கள வீரர்களில் ஒருவராக….
கண்டி SC எதிர் இராணுவப்படை SC
டயலொக் கழக றக்பி லீக்கின் இந்த பருவகாலத்தில் தொடர் வெற்றிகளை குவித்துவந்த கண்டி அணி, நி்ட்டவெல மைதானத்தில் நடைபெற்ற இராணுவப்படை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தங்களுடைய முதல் தோல்வியினை சந்தித்துள்ளது.
போட்டியின் முதற்பாதியில் கண்டி அணி, 12-10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டியால் இராணுவப்படை அணி 23-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டது.
முடிவு – கண்டி SC 22-23 இராணுவப்படை SC
ஹெவ்லொக் SC எதிர் கடற்படை SC
கடற்படை அணியை அதன் சொந்த மைதானமான வெலிசறை விளையாட்டு மைதானத்தில் எதிர்கொண்ட ஹெவ்லொக் அணி 31-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
முதற்பாதியில் 24-10 என்ற சிறந்த முன்னிலையை பெற்றுக்கொண்ட ஹெவ்லொக் அணி, தங்களுடைய முன்னிலையை இரண்டாவது பாதியிலும் தக்கவைத்து, இலகு வெற்றியினை பெற்றுக்கொண்டது.
முடிவு – ஹெவ்லொக் SC 31-20 கடற்படை SC
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<