தொடரின் முதல் தோல்வியை கண்டி அணியிடம் பெற்ற ஹெவலொக்

169

முதல்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின், ஆறாவது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (16) நிறைவுக்கு வந்தன.

இதில் கடந்த ஐந்து வாரங்களாக தோல்வியை தழுவாமல் வெற்றிகளை குவித்துவந்த ஹெவலொக் விளையாட்டு கழகம் தங்களுடைய முதல் தோல்வியை இந்த வாரம் சந்தித்துள்ளது. கண்டி அணிக்கு எதிரான போட்டியில் ஹெவலொக் அணி தோல்வியடைந்ததுடன், இராணுவப்படை விளையாட்டு கழகம் தொடர்ச்சியாக தங்களுடைய 6 ஆவது தோல்வியை தழுவியுள்ளது.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் கண்டி விளையாட்டுக் கழகம்

முதற்தர கழக றக்பி…

கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

நிட்டவெல மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்தப் போட்டியில் கண்டி அணி, 31-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. முதல் பாதியில் கண்டி அணி 3 ட்ரைகள் மற்றும் 3 கொன்வெர்சன்கள் ஊடாக 21 புள்ளிகளை பெற, ஹெவலொக் அணி ஒரு கொன்வெர்சன் மற்றும் ஒரு ட்ரையின் ஊடாக 7 புள்ளிகளை பெற்றது.

எனினும் கண்டி அணிக்கு சவாலாக விளங்கிய ஹெவ்லொக் அணி, இரண்டாவது பாதியில் 14 புள்ளிகளை பெற்ற போதும், கண்டி அணி 10 புள்ளிகளை பெற்று, 31-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 31 – 21 ஹெவலொக் விளையாட்டுக் கழகம்

Live : Kandy SC v Havelock SC – DRL 2018/19 Match #23

Action from the Kandy SC vs Havelock SC game of the Dialog Rugby League 2018/19 on the 16th of December 2018 from…


யாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இராணுவப்படை அணிக்கு எதிரான போட்டியை 41-19 என்ற புள்ளிகள் கணக்கில் பொலிஸ் அணி இலகுவாக வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்த இராணுவப்படை அணி, இந்த பருவகாலத்தில் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியைக் கண்டுள்ளது. முதல் பாதியில் அபாரமாக ஆடிய பொலிஸ் அணி 4 ட்ரைகள், 2 கொன்வெர்சன் மற்றும் ஒரு பெனால்டி என 27-00 என்ற முன்னிலையை பெற்றிருந்தமை, அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 19 – 41 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

Match Replay – Police SC vs Air Force SC DRL 2018/19 #20

Action from the Dialog Rugby League 2018/19 #20 between Police SC and Air Force SC played at Police Park on 9th Sunday 2018.


CR & FC எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

விமானப்படை  மற்றும் CR & FC அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் CR & FC அணி, 36-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதல் பாதியில் 3 கொன்வெர்சன், மூன்று ட்ரைகள் மற்றும் ஒரு பெனால்டி அடிப்படையில், CR & FC அணி 24 புள்ளிகளை பெற, விமானப்படை அணி 2 ட்ரைகள், 2 கொன்வெர்சன் மற்றும் ஒரு பெனால்டி என 17 புள்ளிகளை பெற்றது.

பின்னர், இரண்டாவது பாதியிலும் தங்களுடைய முன்னிலையை தக்கவைத்துக்கொண்ட CR & FC அணி 36-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

முழு நேரம்: CR & FC 36 – 27 விமானப்படை விளையாட்டுக் கழகம்

Match Highlights – CR & FC v Air Force SC DRL 2018/19 #21

Action fro the CR & FC v Air Force game in the Dialog Rugby League 2018/19 #21 played at Longdon Place on 14th December 2018


CH & FC எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

வெலிசரை மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் CH & FC அணி 34 – 26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

முதல் பாதியில் அபாரம் காட்டிய CH & FC அணி, 27-05 என்ற பாரிய முன்னிலையைப் பெற்று வெற்றியை நோக்கி பயணித்தது. இரண்டாவது பாதியில் கடற்படை அணி சிறப்பாக விளையாடிய போதும், அந்த அணியால் மொத்தமாக 26 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது. இதன்படி 34-26 என்ற புள்ளிகள் கணக்கில் CH & FC அணி வெற்றிபெற்றது.

முழு நேரம்: CH & FC 34 – 26 கடற்படை விளையாட்டுக் கழகம்

Live : Navy SC v CH & FC – DRL 2018/19 #24

Action from the Navy SC vs CH & FC game of the Dialog Rugby League 2018/19 on the 16th of December 2018 from Welisara.

இதேவேளை, இந்தவார போட்டிகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றுள்ள கண்டி விளையாட்டுக் கழகம் 36 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை 28 புள்ளிகளுடன் ஹெவலொக் அணியும், மூன்றாவது இடத்தை 22 புள்ளிகளுடன் CR & FC அணியும் பிடித்துள்ளன.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<