கண்டியை தொடர்ந்து ஹெவ்லொக் அணியையும் வீழ்த்திய CH&FC

171

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 13வது வாரத்துக்கான போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில், CH&FC அணி, கண்டி அணியை தொடர்ந்து பலம் வாய்ந்த ஹெவ்லொக் அணியையும் வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகின்றது.

அத்துடன், இந்த வாரம், CR&FC, கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டு கழகம் ஆகிய அணிகளும் தங்களுடைய வெற்றிகளை பதிவு செய்துள்ளன.  

கண்டியை வீழ்த்தி தொடர் வெற்றிகளை குவிக்கும் CH&FC

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக …

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ரத்மலானையில் நடைபெற்ற பொலிஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில், இரண்டாவது பாதியின் அபார ஆட்டத்தால் இராணுவப்படை அணி 24-24 என போட்டியை சமப்படுத்தியது.

போட்டியின் முதற்பாதி ஆட்டத்தில், பொலிஸ் விளையாட்டுக் கழகம் 12-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் தொடர்ச்சியாக பொலிஸ் அணி 24 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்த போதும், இராணுவப்படை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிநேரத்தில் போட்டியை சமப்படுத்தியது.

CR&FC எதிர் கண்டி விளையாட்டுக் கழகம்

கண்டி அணியை தங்களுடைய சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட CR&FC அணி, துரதிஷ்டவசமாக 26-31 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.

Photo Album : CR & FC v Kandy SC – Dialog Rugby League 2018/19 | #Match 50

போட்டியின் முதற்பாதியில் கண்டி அணி அபாரமாக ஆடி, 28-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் CR&FC அணி 10 புள்ளிகளை மேலதிகமாக பெற்ற நிலையில், கண்டி அணி வெறும் 3 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. எனினும், 3 புள்ளிகள் வித்தியாசத்தில் கண்டி அணி வெற்றியை தக்கவைத்தது.


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

வெலிசறை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற கடற்படை மற்றும் விமானப்படை அணிகளுக்கு இடையிலான போட்டியில், கடற்படை அணி வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியில், விமானப்படை அணி 06-05 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய கடற்படை அணி 18-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

Photo Album : Navy SC vs Air Force SC – Dialog Rugby League 2018/19 | #Match 51

CH&FC எதிர் ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம்

கண்டி அணியை தங்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்த CH&FC அணி, நேற்றைய போட்டியில் ஹெவ்லொக் அணியையும் வீழ்த்தி தொடர்ச்சியாக 8வது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதற்பாதியில் 26-22 என்ற புள்ளிகள் கணக்கில் ஹெவ்லொக் அணி முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியில் முன்னிலைபெற்ற CH&FC அணி 40-33 என்ற புள்ளிகள் கணக்கில் 7 புள்ளிகளால் வெற்றிபெற்றது.

இந்தவார போட்டி முடிவுகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் கண்டி அணி 67 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், ஹெவ்லொக் அணி 66 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் CH&FC அணி 57 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.  

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<