முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 11வது வாரத்துக்கான போட்டிகள் நேற்றுடன் (27) நிறைவுக்கு வந்தன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில், CH&FC, கண்டி SC, ஹெவ்லொக் SC மற்றும் CR&FC அணிகள் தங்களுடைய வெற்றிகளை பதிவு செய்துள்ளன.
விறுவிறுப்பான போட்டியில் கடற்படையை வீழ்த்திய இராணுவம்
முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான …
CR&FC எதிர் இராணுவப்படை விளையாட்டு கழகம்
CR&FC அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அபாரமாக ஆடிய CR&FC அணி, 53-33 என்ற 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டியின் முதற்பாதியில் 31-19 என்ற புள்ளிகள் கணக்கில் CR&FC அணி முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது பாதியிலும் சிறப்பாக ஆடி இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
முடிவு – CR&FC 53-33 இராணுவப்படை விளையாட்டு கழகம்
கண்டி விளையாட்டு கழகம் எதிர் கடற்படை விளையாட்டு கழகம்
கண்டி நிட்டவெல மைதானத்தில் நடைபெற்ற கடற்படை அணிக்கு எதிரான போட்டியில் தங்களது சொந்த மைதானத்தின் சாதகத்தை பயன்படுத்திக் கொண்டு ஆடிய கண்டி விளையாட்டு கழகம் 63 – 31 என்ற புள்ளிகள் கணக்கில் மிகச் சிறந்த வெற்றியை பெற்றுக்கொண்டது.
முதற்பாதியில் ஓரளவு போட்டித் தன்மையுடன் கடற்படை அணி விளையாடியிருந்தாலும், கண்டி அணி 28-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றது. எனினும், இரண்டாவது பாதியில் தங்களுடைய ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்ட கண்டி அணி மொத்தமாக 8 ட்ரைகள், 8 கன்வேர்சன்கள் மற்றும் ஒரு பெனால்டி ஊடாக 63 புள்ளிகளை குவித்து இலகு வெற்றி பெற்றது.
முடிவு – கண்டி விளையாட்டு கழகம் 63-31 கடற்படை விளையாட்டு கழகம்
CH&FC எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்
டயலொக் றக்பி லீக் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறிவந்த CH&FC அணி, தற்போது தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றது. 6வது வாரத்திலிருந்து தங்களுடைய வெற்றிக் குவிப்பினை ஆரம்பித்த இந்த அணி, பொலிஸ் விளையாட்டு கழகத்துக்கு எதிரான இவ்வார போட்டியில் 38-25 என்ற புள்ளிகளுடன் வெற்றிபெற்று தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை சுவைத்துள்ளது.
ஆட்டத்தின் முதற்பாதியில் பொலிஸ் அணி 18-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த போதும், அடுத்த பாதியில் முன்னேறிய CH&FC அணி 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முடிவு – CH&FC 38-25 பொலிஸ் விளையாட்டு கழகம்
சொந்த மைதானத்தில் இராணுவப் படையிடம் வீழ்ந்த கண்டி அணி
முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான …
ஹெவ்லொக் விளையாட்டு கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம்
ஹெவ்லொக் அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் விமானப்படை அணியை எதிர்கொண்டு 35-06 என்ற புள்ளிகள் கணக்கில் இலகு வெற்றியை நேற்றைய தினம் பெற்றுள்ளது.
ஆட்டத்தின் முழு நேரத்திலும் ட்ரை ஒன்றினையும் பெறமுடியாத விமானப்படை அணி, 2 பெனால்டிகளுடன் மொத்தமாக 6 புள்ளிகளை பெற்றுக்கொள்ள, ஹெவ்லொக் அணி 35 புள்ளிகளை குவித்து வெற்றியை தனதாக்கியது. இதில் விமானப்படை அணி இரண்டாவது பாதியில் எவ்வித புள்ளிகளையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு – ஹெவ்லொக் விளையாட்டு கழகம் 35-06 விமானப்படை விளையாட்டு கழகம்