சம்பியனாகப் போராடும் புளு ஸ்டாரை சமன் செய்தது ரட்னம்

520

சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு ஸ்டார் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கான விறுவிறுப்பான மோதல் கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவுற்றது.  

இந்த முடிவால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளன. எனினும், இம்முறை தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள புளு ஸ்டார் அணி எந்தவித தோல்வியையும் சந்திக்காத அணியாக சம்பியன் கிண்ணத்தை வெல்லும் பயணத்தில் நீடிக்கின்றது.

புளூ ஸ்டார் வீரர்கள் மீது நாவலப்பிடியில் தாக்குதல்

நாவலப்பிடி, ஜயதிலக்க விளையாட்டரங்கில் நேற்று (09) நடைபெற்ற …

இந்தப் போட்டி ஆரம்பமாகி முதல் நிமிடத்தில் ரட்னம் வீரர் சசன்க டில்ஹார எதிரணியின் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை புளு ஸ்டார் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோ பாய்ந்து தட்டினார்.

மீண்டும் முதல் 10 நிமிடங்களுக்குள் சசன்க நீண்ட தூரத்தில் இருந்து கோல் நோக்கி எடுத்த இரண்டு முயற்சிகளையும் மஞ்சுல பெர்னாண்டோ கோலுக்கு அண்மையில் இருந்து தடுத்தார்.

எனினும், 10 நிமிடங்களின் பின்னர் எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து ரட்னம் வீரர் அமான் பைசர் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்போது, கோல் பெறுவதற்கு இருந்த இலகுவான வாய்ப்பை சிதிரகுமார் வெளியே அடித்து வீணடித்தார்.

போட்டியின் 20ஆவது நிமிடத்தில் எதிரணியின் எல்லையின் ஒரு பகுதியில் கிடைத்த ப்ரீ கிக்கை ரட்னம் வீரர் அப்தெல் பெற்றார். அப்தெல் உள்ளனுப்பிய பந்தை சிதிரகுமார் ஹெடர் செய்ய, பந்து உயர்ந்து வெளியே சென்றது.

போட்டியின் முதல் 25 நிமிடங்களுக்குள் புளு ஸ்டார் வீரர்கள் பெற்ற முதல் வாய்ப்பினை ரட்னம் கோல் காப்பாளர் பஸ்ரீன் இலகுவாகப் பிடித்தார்.

30 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை புளு ஸ்டார் வீரர் சிபோஷி கோல் நோக்கி நிறைவு செய்வதற்குள் பஸ்ரீன் வேகமாக வந்து பந்தைத் பிடித்தார்.

டில்ஷானின் ஹெட்ரிக் கோலினால் சுபர் சன்னை வீழ்த்திய சோண்டர்ஸ்

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேருவளை சுபர் ….

மறுபுறம், ஆரம்பம் முதல் அபாரம் காண்பித்து வந்த சசன்க முன்னோக்கி எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்தை புளு ஸ்டார் பின்கள வீரர் அஜ்மிர் பாய்ந்து வெளியே ஹெடர் செய்தார்.

சில நிமிடங்களில் புளு ஸ்டார் அணிக்கு எதிரணியின் பரப்பில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது செலுத்திய பந்தினை புளு ஸ்டார் வீரர்கள் அடுத்தடுத்து மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் ரட்னம் பின்களத்தில் வைத்து தடுக்கப்பட்டன.

மீண்டும் எதிரணியின் கோலுக்கு நேர் எதிரே கோல் பெட்டிக்கு வெளியில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ரட்னம் வீரர் அப்தெல் பெற்றார். அவர் கோலின் வலது புறத்தால் செலுத்திய பந்தை மஞ்சுல பிடித்தார்.

தொடர்ந்து ரட்னம் வீரர் மொஹமட் அகீல் தனிமையில் முன்கோக்கி எடுத்துச் சென்ற பந்தை புளு ஸ்டார் கோல் எல்லையில் சிறப்பாக நிறைவு செய்யத் தவறினார்.

முதல் பாதியின் இறுதித் தருவாயில் மைதானத்தின் மத்தியில் பந்தைப் பெற்ற அமான், அதனை முன்னோக்கி எடுத்துச் சென்று, கோல் எல்லைக்கு அருகில் இருந்து வேகமாக உதைய, வலது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் பந்து வெளியே சென்றது.

முதல் பாதி: புளு ஸ்டார் வி.க 0 – 0 ரட்னம் வி.க

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களின் பின்னர் ரட்னம் அணித் தலைவர் ரஷ்மித்த மதுரங்க, எதிரணியின் பெனால்டி எல்லையில் வைத்து கோலுக்கு எடுத்த முயற்சி குமாரவினால் தடுக்கப்பட, பந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.

57ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது பந்தைப் பெற்ற ஆகில் கோல் நோக்கி உதைந்த பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து மஞ்சுல பெர்னாண்டோ கம்பங்களுக்கு மேலால் வெளியே தட்டிவிட்டார்.

மீண்டும் 60 ஆவது நிமிடத்தில் சிதிரகுமார் ரட்னம் அணியின் பெனால்டி எல்லையில் இருந்து கோல் நோக்கி பந்தை உதைகையில் மஞ்சுல பாய்ந்து அதனை திசை திருப்பினார்.

மீண்டும் 66ஆவது நிமிடத்தில், உள்ளனுப்பப்பட்ட பந்தை கோல் காப்பாளருக்கு அண்மையில் இருந்து சசன்க கோலுக்கு முயற்சிக்கையில் பந்து மஞ்சுலவின் கைகளுக்கே சென்றது.

தொடர்ந்து புளு ஸ்டார் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை பஸ்ரீன் தட்டி விட மீண்டும் புளு ஸ்டார் வீரர்கள் மேற்கொண்ட முயற்சி கோலை விட்டு வெலகிச் சென்றது.

80ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் இருந்து புளு ஸ்டார் வீரர் உசே சன்டே உயர்த்தி உள்ளனுப்பிய பந்தைப் பெற்ற ஈ.பி ஷன்ன அதனை கோல் நோக்கி உதைந்தபோது பஸ்ரீன் பந்தைப் பாய்ந்து பிடித்தார்.

மீண்டும் அடுத்த நிமிடம் அவ்வணியின் ஷிமேசி கோல் நோக்கி உதைந்த பந்து கோல் கம்பத்திற்கு அருகால் வெளியே சென்றது.

Photo Album : Colombo FC v Matara City | Week 11 | Dialog Champions League 2018

மிகவும் விறுவிறுப்படைந்த இந்த ஆட்டத்தில், புளு ஸ்டார் அணிக்கு மாற்று வீரராக வந்த ஷன்ன, எதிரணி வீரர் ஒருவரைத் தாக்க, அவர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ரட்னம் வீரர்களுக்கு எதிரணியின் மத்திய களத்தில் வைத்து கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்ளனுப்பிய பந்தை மதுரங்க கோல் நோக்கி ஹெடர் செய்ய, அதனையும் மஞ்சுல பிடித்தார்.  

போட்டியின் இறுதி நிமிடங்களில் இரு அணி வீரர்களுக்கும் ப்ரீ கிக்கிற்கான வாய்ப்புகள் பல கிடைத்த போதும், அவற்றினாலும் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.

எனவே, போட்டி நிறைவில் எந்தவொரு கோல்களும் பெறப்படாமையினால் ஆட்டம் சமநிலையடைந்தது.

முழு நேரம்: புளு ஸ்டார் வி.க 0 – 0 ரட்னம் வி.க  

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மஞ்சுல பெர்னாண்டோ (புளு ஸடார் வி.க)

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

புளு ஸ்டார் வி.க – குமார 20, FBC சம்பத் 902

ரட்னம் வி.க – ஹசீம் அப்துல்லா 21, அமான் பைசர் 39

சிவப்பு அட்டை பெற்றவர்கள்

புளு ஸ்டார் வி.க – ஈ.பி ஷன்ன

>>போட்டியை மீண்டும் பார்வையிட<<