டயலொக் சம்பியன்ஸ் லீக் 2016இன் குழு மட்டத்திலான சுழுச்சுற்றுப் போட்டிகளின் இறுதி வாரத்தில் இரு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகும் நோக்கிலும், எதிர்வரும் தொடரின் வெளியேற்றத்திலிருந்து தப்பிக்கும் நோக்கிலும் மோதிக்கொண்டன.
ThePapare.com குறித்த வாரத்தின் சிறந்த பதினொரு வீரர்களை உள்ளடக்கிய அணியை தெரிவு செய்துள்ளது. இவ்வணி 4-3-3 என்ற அமைப்பில் விளையாடும் நோக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றி பெற வேண்டிய தீர்க்கமான போட்டியில் ஷஷிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூப்பர் 8 இற்குள் உள் நுழையும் நோக்குடன் விளையாடிய சுபர் சன் அணியினை தோற்கடிக்க பல தடுப்புக்களை மேற்கொண்டு, பொலிஸ் விளையாட்டுக் கழகம் அடுத்த தொடரில் இருந்து வெளியேற்றப் படுவதை தடுத்தார்.
கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற மற்றுமொரு போட்டியில் அனுபவ வீரர் சீமன், அவர் தரப்பிற்கு வந்த அனைத்து வாய்ப்புகளையும் தடுத்தார். சொலிட் அணியின் நட்சத்திர வீரர் தக்சில தனோஜினை கோல் அடிக்காது பார்த்துக் கொண்ட ஒரு முக்கிய வீரராக இவர் செயற்பட்டார்.
இலங்கை தேசிய அணிக்குத் தெரிவான இளம் வீரரான இவர், சிறப்பாக விளையாடி ராணுவப்படை விளையாட்டுக் கழகம் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தை தோற்கடிக்க உதவி புரிந்தார். கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் கடந்த வருட சம்பியன் அணி என்பது குறிப்பிடத் தக்கது.
விமானப்படை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயற்பட்டு அவர்கள் கோல் ஒன்றையேனும் பெற முடியாமல் போவதற்கு இவரது பங்களிப்பு பெரும் பங்கு வகித்தது.
சோண்டர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் நிதானமான, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சலன. இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் சலன வாய்ப்புக் கிடைக்கும் போது முன் சென்றும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பிரபல ரினௌன் விளையாட்டுக் கழக வீரர் பஸால் கோல்களை போடாவிடினும் தனது அருமையான ஆட்டத்தால் பல வாய்ப்புகளை உட்படுத்தினார். இவரது வேகம் இந்தப் போட்டியில் மட்டுமன்றி சுற்றுப் போட்டிகளின் அனைத்து போட்டிகளிலும் எதிரணிக்கு சவால் விடுத்தது.
நடு மத்தியகள வீரர் இடோவு ஹமீட் தான் விளையாடிய 90 நிமிடங்களிலும் சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இடோவு ஹமீட் கோல் ஒன்றையும் போட்டு அணியின் வெற்றிக்கு அத்திவாரமிட்டார்.
திவங்க சந்திரசேகரவுடன் இணைந்து சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய சஜித் குமார முதல் பாதியில் கொலொன்றையும் போட்டார். மேலும், அணியை ஸ்திரப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார்.
மிகவும் தளம்பலான ஆட்டத்தை கடந்த போட்டிகளில் வெளிக்காட்டிய ட்ராவோரே மொஹமட் இம்முறை சிறப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் தனது அணிக்காக கோல் ஒன்றையும் போட முடிந்தது. மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.
ஒரு கோல் மற்றும் ஒரு வழங்கல் (assist) மூலம் அணியின் வெற்றிப்பாதையை உருவாக்கிய பெருமை திவங்க சந்திரசேகரவையே சாரும். நட்சத்திர வீரர் மொஹமட் இஸட்டீன் விளையாடாத போதிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு இவர் பலம் அமைத்தார்.
நடு நிலை வீரராக இருந்து முன்கள வீரராக மாறிய இவர், தனது அணிக்காக கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். இலங்கை அணியின் முன்னாள் உப தலைவரான ரொஷான், தனது அனுபவம் மூலம் பல வாய்ப்புகளையும் உருவாக்கினார்.