பெத்தகான கால்பந்து மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் டிபெண்டர்ஸ் மற்றும் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகங்களுக்கு இடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் மூன்றாம் வாரத்திற்கான லீக் போட்டி 3-3 என்கிற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றுள்ளது.
சுப்பர் சன்னை கோல் வெள்ளத்தில் மூழ்கடித்த கொழும்பு கால்பந்து கழகம்
சுகததாச அரங்கில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஷிப்..
டிபெண்டர்ஸ் அணி டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் தமது முன்னைய இரண்டு மோதல்களிலும் வெற்றி பெற்றவாறு இப்போட்டியில் களம் கண்டதோடு, கம்பளை கிறிஸ்டல் பெலஸ் அணி தமது முன்னைய மோதல்களில் ஒன்றில் தோல்வியோடும், ஒன்றை சமநிலையிலும் முடித்தவாறு இந்த சவாலுக்கு தயாராகியிருந்தது.
போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரண்டு அணிகளும் பல வாய்ப்புக்களை தவறவிட்டிருந்திருந்தன. மெதுவாகவே முன்னேறிய ஆட்டத்தில் முதல் கோலுக்கான முயற்சி கிறிஸ்டல் பெலஸ் அணியின் ஐசாக் அபாவினால் மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவர் உதைந்த பந்து கம்பத்திற்கு சற்று அகலமாக சென்றது.
தொடர்ந்து போட்டியின் முதல் கோலினை டிபெண்டர்ஸ் கழக அணி பெற்றது. 18ஆவது நிமிடத்தில் லக்ஷித ஜயதுங்க பரிமாறிய பந்தினை R.J. பெனார்ட் தலையால் முட்டி கோலாக்கினார். இந்த கோலினை தடுப்பதற்காக கிறிஸ்டல் பெலஸ் அணியின் கோல்காப்பாளர் மதுசங்க ஜயத்திலக்க பாய்ந்து முயற்சி மேற்கொண்ட போதிலும் அம்முயற்சி வீணாகியிருந்தது.
மேலும் 10 நிமிடங்களில் மொஹமட் இஸ்ஸடீன் மிகவும் வலுவான உதை ஒன்றுடன் டிபெண்டர்ஸ் அணிக்கான இரண்டாவது கோலினைப் பெற்றுத் தந்தார். இந்த கோலினை தடுக்கும் வாய்ப்பு கிறிஸ்டல் பெலஸ் கோல் காப்பாளர் மதுசங்கவிற்கு இருந்த போதிலும் அதனை அவர் தவறவிட்டிருந்தார்.
Photos: Defenders FC v Crystal Palace FC | Week 3 | Dialog Champions League 2018
ThePapare.com | Viraj Kothalawala | 12/11/2018 Editing…
ஆனால், இன்னும் இரண்டு கோல்களுக்கான முயற்சிகள் டிபெண்டர்ஸ் அணியினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றை வெற்றிகரமாக மதுசங்க தடுத்திருந்தார்.
இதேநேரம், ஐசாக் அபாவை தவிர கிறிஸ்டல் பெலஸ் அணியின் வேறு எந்த வீரர்களினாலும் முயற்சிகள் செய்யப்படாத நிலையில் போட்டியின் முதற்பாதி டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தின் ஆதிக்கத்தோடு நிறைவுக்கு வந்தது.
முதல் பாதி: டிபெண்டர்ஸ் கா.க 2 – 0 கிறிஸ்டல் பெலஸ் கா.க
ஆட்டத்தின் முதற்பாதி மிக வேகமாக நகர இரண்டாம் பாதியின் முன்னைய நிமிடங்களில் டிபெண்டர்ஸ் அணியின் மொஹமட் இஸ்ஸடீன் மூலம் அடுத்த கோல் பெறப்பட்டது. எனினும், அது ஓப் திசையில் பெறப்பட்ட செல்லுபடியற்ற கோல் என போட்டி நடுவர் அறிவித்தார்.
தொடர்ந்து முன்னேறிய போட்டியில் ஐசாக் அபாவினால் கிறிஸ்டல் பெலஸ் அணிக்காக கோல் பெறுவதற்கான முயற்சிகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இரண்டாம் பாதியில் பலவீனமான பின்களத்தை காட்டிய டிபெண்டர்ஸ் அணிக்கு எதிராக, கம்பளை வீரர்கள் தமது முதல் கோலினை ரொஷான் பெத்திலேட் மூலம் 75ஆவது நிமிடத்தில் பெற்றனர். இந்த கோலினை பெற ஐசாக் அபா உதவியாக இருந்தார்.
கசுனின் ஹெட்ரிக் கோலுடன் எவரெடியை இலகுவாக வீழ்த்திய சௌண்டர்ஸ்
வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின்..
அவ்வணியின் முதல் கோல் பெறப்பட்டு அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஐசாக் அபா இன்னுமொரு கோலினைப் போட்டார். இதனால், ஆட்டம் தலா 2 கோல்களுடன் சமனானது.
கிறிஸ்டல் பெலஸ் அணியின் இரண்டாவது கோல் பெறப்பட்டு 120 செக்கன்களுக்குள் ரொஷான் பெத்திலேட்டின் அபார முயற்சியினால் அடுத்த கோல் பெறப்பட்டது. இதனால், கிறிஸ்டல் பெலஸ் அணியினர் ஆட்டத்தில் மூன்று கோல்களுடன் முன்னிலை பெற்றனர்.
கிறிஸ்டல் பெலஸ் அணி இரண்டாம் பாதியில் பெற்ற மீள்வருகை கோல்களினால் அவ்வணியே வெற்றி பெறும் என அனைவரும் நினைத்திருக்க, போட்டிக்காக வழங்கப்பட்ட உபாதையீடு நிமிடங்களில் (Extra Time) டிபெண்டர்ஸ் அணிக்காக மதுஷான் டி சில்வா கோல் ஒன்றினைப் பெற்றார்.
இதனால், வெற்றிபெற காத்திருந்த கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகத்தினால் டிபெண்டர்ஸ் அணியுடனான போட்டியினை 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிக்க முடிந்தது.
முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 3 – 3 கிறிஸ்டல் பெலஸ் கா.க
ThePapare.com இன் ஆட்டநாயகன் – ஐசாக் இபா (கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம்)
கோல் பெற்றவர்கள்
டிபென்டர்ஸ் கால்பந்து கழகம் – R.J. பெர்னாட் 18’, மொஹமட் இஸ்ஸடீன் 28’, மதுஷான் டி சில்வா 90+3’
கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் – ரொஷான் பெத்திலேட் 75’&82’, ஐசாக் அபா 80’
மஞ்சள் அட்டை
டிபென்டர்ஸ் விளையாட்டுக் கழகம் – அசிகுர் ரஹ்மான் 72’
கிறிஸ்டல் பெலஸ் – ரொஷான் பெத்திலேட் 65’, மொஹமட் சிபான் 82’ & 90+6’, பெருமாள் பிரவீன் 89’
சிவப்பு அட்டை
கிறிஸ்டல் பெலஸ் – மொஹமட் சிபான் 90+6’
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<