டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சுப்பர் 8 சுற்றின் ரினௌன் அணியுடனான போட்டியில் முதல் பாதியில் பெற்ற 3 கோல்களின் உதவியுடன் ராணுவப்படை அணி வெற்றியைப் பெற்று, சுப்பர் 8 சுற்றில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பலம் மிக்க இந்த இரு அணிகளும் கடந்த பருவகாலத்திற்கான FA கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் கடைசியாக பலப்பரீட்சை நடத்தின. அதில் ராணுவப்படை விளையாட்டுக் கழக அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தையும் தம்வசப்படுத்தியது.
இந்நிலையில், இலங்கை கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இன்றைய இந்த முக்கிய போட்டியில் ராணுவப்படை அணியினர் 4-1-3-2 என்ற முறைப்படியும், ரினௌன் அணியினர் 5-3-2 என்ற முறைப்படியும் விளையாடினர்.
இறுதி நேர அதிரடியின் காரணமாக தோல்வியிலிருந்து தப்பித்த புளு ஸ்டார்
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றம் அளிக்காத விதத்தில் போட்டி ஆரம்பித்தது முதலே ஆட்டம் சூடு பிடித்திருந்தது. முதல் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் ரினௌன் வீரர் ஜொப் மைக்கல் பந்தைப் பெற்று சிறந்த முறையில் எதிரணியின் கோல் வரை கொண்டுவந்தார். இறுதித் தருவாயில் அவரது கோலுக்கான இலக்கு சிறந்ததாக இருக்கவில்லை.
பின்னர் 8ஆவது நிமிடத்தில் சஜித் குமார பந்தைப் பெற்றுக்கொண்டு, மைதானத்தின் ஒரு பக்கத்தில் இருந்து ஓரிரு வீரர்களைத் தாண்டிச் சென்று கம்பங்களுக்கு நடுவே வந்து பந்தை வேகமாக உதைய, பந்து கம்பங்களுக்குள் சென்றது. எனவே, 10 நிமிடங்களுக்கு முன்னரே ராணுவப்படை அணி முன்னிலை பெற்றது.
அதன் பின்னர், 13ஆவது நிமிடத்திலும் சஜித் குமார பந்தை சிறந்த முறையில் இஸ்ஸதீனுக்கு வழங்க, அவர் கோல்களை நோக்கி பந்தை எடுத்து வந்தார். அதன்போது பந்தைப் பிடிக்க கோல் காப்பாளர் தனுஷ்க ராஜபக்ஷ வர, இஸ்ஸதீன் பந்தை உயர்த்தி கோல்களுக்குள் செலுத்த முயற்சித்தார். எனினும் பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.
போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ரிஸ்னியுடன் முறையற்ற விதத்தில் முட்டிய ராணுவப்படை அணியின் நதீக புஷ்பகுமாரவிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு, எதிரணிக்கு ப்ரீ கிக் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பைப் பெற்ற அணித்தலைவர் ரிப்னாஸ் உதைந்த பந்து கம்பங்களுக்கு மிகவும் மேலால் சென்றது.
அதற்கு அடுத்த 3 நிமிடங்களிலும் ராணுவப்படை அணி வீரர் அனுருந்த வரகாகொடைக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இந்த முறை ப்ரீ கிக் வாய்ப்பை பஸூல் ரஹ்மான் பெற்றார். எனினும் அவரது உதையும் எதிரணி வீரர் ஒருவரால் தடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 24 நிமிடங்கள் கடந்த நிலையில் ரினௌன் வீரர் முஜீபிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அது போட்டியின் மூன்றாவது மஞ்சள் அட்டை காண்பிக்கும் சந்தர்ப்பமாக இருந்தது.
விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் லக்ஷித ஜயதுங்க பந்தை வழங்க இஸ்ஸதீன் அதை ஒரே முறையில் கோல்களுக்குள் அடித்தார். பந்து கோல் காப்பாளரின் கையில் பட்டு, அணித்தலைவர் மதுஷானிடம் வர, அவர் அதனை கோலாக்கினார்.
அதன் பின்னரும் புன்சர திருன, அணிக்காக மூன்றாவது கோலுக்காக பந்தை நேரடியாக கோலை நோக்கி உதைய, வலது பக்க கம்பங்களுக்கு சற்று அண்மித்த வகையில் பந்து வெளியே சென்றது.
எந்தவித கோல்களும் இல்லாத நிலையில் திடீர் என்று ரினௌன் வீரர்கள் பந்தைப் பெற்று கடுமையாக விளையாடி, சிறந்த பரிமாறல்களை மேற்கொண்டு பல கோல் முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டனர். எனினும், அந்த அனைத்து முயற்சிகளையும் ராணுவப்படையின் பின்கள வீரர்கள் சிறந்த முறையில் தடுத்தனர்.
இஸ்ஸதீனின் இரு கோல்களின் உதவியுடன் வெற்றி பெற்ற ராணுவப்படை
எனினும் 44ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விமானப்படை அணித்தலைவர் மதுஷான் டி சில்வா கோல்களை நோக்கி உதைந்த பந்தை கோல் காப்பாளர் ராஜபகஷ மறைக்க முயற்சிக்கையில், அவரது கையில் பட்டு, பந்து கோலுக்குள் சென்றது.
பின்னர் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் ஜொப் மைக்கல் கோல் பெறுவதற்கு தனியே பந்தை எடுத்துச் செல்லும்பொழுது, ராணுவப்படை கோல் காப்பாளர் குமார சிறிசேன பந்தை படுத்தார்.
முதல் பாதி: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 03 – 00 ரினௌன் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே ரினௌன் வீரர் பஸூல் ரஹ்மானின் முறையற்ற செயல் காரணமாக அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் ரினௌன் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின் மூலமும் அவர்களுக்கு சிறந்த பயன்பெறக் கிடைக்கவில்லை.
போட்டியின் 56 நிமிடங்களின் பின்னர் மதுஷான், சஜித் குமார மற்றும் இஸ்ஸதீன் ஆகியோரால் ராணுவப்படை அணிக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைத்த போதும், அவை சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை.
பின்னர் 70ஆவது நிமிடத்தில் முஜீப் கோல்களை நோக்கி அடித்த பந்தை கோல் காப்பாளர் சிறிசேன சிறப்பாகப் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து ரினௌன் அணி வீரர்களின் பந்துப் பரிமாற்றம் அவர்களது வழமையான விளையாட்டை விட மிகவும் வித்தியாசமாகவும், மோசமாகவும் இருந்தது. அணி சார்பாக ஜொப் மைகல் மாத்திரமே எதிரணியின் கோல் எல்லையில் சிறப்பித்த ஒரே ஒரு வீரராகக் காணப்பட்டார்.
முதல் பாதியுடன் ஒப்பிடும்பொழுது இரண்டாவது பாதியில் ரினௌன் அணியின் பின்கள வீரர்கள் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டனர். மத்தியகள வீரர்களும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தைக் காண்பித்த போதும் அவர்களது பந்துப் பரிமாற்றங்களில் பல தவறுகள் விடப்பட்டமை அவர்கள் ஒரு கோலைக்கூட பெறாமல் இருந்தமைக்கு காரணமாக இருந்தது.
முழு நேரம்: ராணுவப்படை விளையாட்டுக் கழகம் 00 – 00 ரினௌன் விளையாட்டுக் கழகம்
Thepapare.com இன் ஆட்ட நாயகன் – சஜித் குமார (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)
போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த ராணுவப்படை அணியின் பயிற்றுவிப்பாளர் பௌமி, ”எமது வீரர்களின் இன்றைய விளையாட்டு மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் பாதியிலேயே போட்டியை தம்வசப்படுத்தியமை மகிழ்ச்சியளிக்கின்றது. எமது வீரர்களின் பயிற்சி மற்றும் உடல் தகுதி என்பவற்றை அதிகரிக்க வேண்டிய தேவை எனக்கு உள்ளது. மூன்று வீரர்களுக்கு இடையிலான பந்துப் பரிமாற்றம் சிறந்த முறையில் இருந்தது” என்றார்.
தோல்வியடைந்த அணியின் பயிற்றுவிப்பாளர் அமானுல்லா கருத்து தெரிவிக்கும்பொழுது, ”இன்று அணியினரின் விளையாட்டு மிகவும் மோசமாக இருந்தது. நாம் வெற்றியடையக்கூடிய போட்டியாக இருந்தாலும் ராணுவப்படை அணியுடன் ஒப்பிடும்பொழுது இன்று நாம் மிக மோசமாகவே விளையாடினோம்.
அது தவிற, எமது வழமையான கோல் காப்பாளர் மற்றும் முக்கிய வீரரான பசாலும் இன்று ஆடவில்லை. நாம் மேற்கொண்ட பயிற்சிகளும் போதாது. தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாகப் பிரகாசிப்போம்” என்றார்.
கோல் பெற்றவர்கள்
ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – சஜித் குமார 8’, மதுஷான் டி சில்வா 29’ & 44’
மஞ்சள் அட்டை
ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – நதீக புஷ்பகுமார 16’, அனுருந்த வரகாகொட 19,
ரினௌன் விளையாட்டுக் கழகம் – முஜீப் 24’, பஸூல் ரஹ்மான் 49’