இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனஞ்சய டி சில்வா உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி இந்தியாவுடன் ஆடும் போட்டியில் ஆடுவது சந்தேகம் என ThePapare.com இற்கு அறியக் கிடைத்திருக்கின்றது.
>>சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்
இறுதியாக புனேவில் ஆப்கானுடன் 7 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இந்தியாவினை நாளை (02) சந்திக்கின்றது.
இந்த நிலையில் ஆப்கான் போட்டி அடங்கலாக உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய ஏனைய போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தனன்ஞய டி சில்வா இந்த தொடரில் மொத்தமாக இதுவரை 87 ஓட்டங்கள் வரை பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தனன்ஞய டி சில்வா இந்திய அணியுடனான போட்டியில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.
தனன்ஞய டி சில்வா இல்லாத நிலையில் இலங்கை அணியானது நாளைய இந்திய அணியுடனான போட்டியில் துஷான் ஹேமன்த அல்லது துனித் வெல்லாலகே ஆகிய வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் இங்கிலாந்து அணிக்கு எதிராக உபாதை சிக்கல் ஒன்றை சந்தித்த சதீர சமரவிக்ரம ஆப்கான் மோதலில் களத்தடுப்பில் ஈடுபடும் போது சிக்கலை எதிர் கொண்டிருந்தார். எனினும் சதீர சமரவிக்ரம இந்திய மோதலில் ஆட பூரண உடற்தகுதியினைப் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<