இலங்கை கரப்பந்தாட்ட சங்கமும், இலங்கை பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கமும் இணைந்து 18ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்து நடாத்திய DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டப் போட்டித் தொடரின் 19 வயதுதின் கீழ் பிரிவில் ஆடவருக்கான சம்பியன் பட்டத்தை நாத்தாண்டிய தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியும், மகளிருக்கான சம்பியன் பட்டத்தை ஆனமடுவ மத்திய கல்லூரியும் சுவீகரித்துக் கொண்டன.
கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆசியாவை வென்ற இலங்கைக்கு ஏழாமிடம்
மியன்மாரின் தை – பெய் – தோ நகரில் நிறைவுக்கு வந்த ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி,
கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிய DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 4000 பாடசாலைகள் பங்கேற்றன.
ஐந்து வயதுப் பிரிவுகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற இம்முறை போட்டிகளில் மாவட்ட ரீதியாக நடைபெற்ற ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் நிறைவில் 500 பாடசாலை அணிகள் தேசிய மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகியிருந்தன.
இந்த நிலையில், இம்முறை DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் மஹரகமை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் கடந்த 03ஆம், 04ஆம் திகதிகளில் நடைபெற்றன.
இம்முறை போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான இறுதிப் போட்டியில் ருவன்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைச் செய்த நாத்தாண்டிய தம்மிஸ்ஸர மத்திய கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. குறித்த வயதுப் பிரிவில் அந்த அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மாரவில புனித சேவியர்ஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றுக்கொண்டது.
2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் இணைப்பு
தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால் 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்ற தெற்காசிய விளையாட்டு …
இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஆனமடுவ மத்திய கல்லூரி மற்றும் மஹஉஸ்வௌ ரத்னபால கல்லூரி ஆகியன பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் (26-24, 25-18, 25-20) 3-0 என்ற நேர் செட் கணக்கில் ஆனமடுவ மத்திய கல்லூரி அணி இலகு வெற்றியைப் பதிவுசெய்து சம்பியனாகத் தெரிவாகியது.
அத்துடன், கடந்த வருடப் போட்டிகளில் சம்பியனாகத் தெரிவாகிய கலிகமுவ மத்திய கல்லூரி அணி இம்முறை மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் போது
இப்போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதை நாத்தாண்டிய தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் மஹேல இந்துவீரவும், சிறந்த வீராங்கனைக்கான விருதை ஆனமடுவ மத்திய கல்லூரியின் தினூஷா தில்ருக்ஷியும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, 11 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் சிலாபம் அருட்தந்தை எட்மண்ட் பீரிஸ் கல்லூரியை எதிர்த்தாடிய நாத்தாண்டிய ஜனாதிபதி கல்லூரி அணி 2-0 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
அதே வயதுப்பிரிவில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் அநுராதபுரம் சியபலாகஸ்வௌ மெதகம கல்லூரியை 2-0 என வீழ்த்திய அம்பாறை உஹன திஸ்ஸபுர கல்லூரி அணி சம்பியனாகத் தெரிவாகியது.
அதேபோன்று, 13 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் ருவன்வெல்ல இராஜசிங்க கல்லூரி அணியை 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இம்புலான ஸ்ரீ சேன மகா வித்தியாலயம் சம்பியனாகத் தெரிவாகியதுடன், மகளிர் பிரிவில் திருகோணமலை தேசிய பாடசாலையை 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய அம்பாறை உஹன திஸ்ஸபுர கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
அதேபோல, 15 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் மாரவில புனித சேர்வியஸ் கல்லூரியை எதிர்கொண்ட வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி அணி 3-2 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிபெற்று ஆடவருக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
அதே வயதுப்பிரிவில் மகளிருக்கான இறுதிஆட்டத்தில் கிரிந்திவெல சங்கமித்தா மகளிர் கல்லூரியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய அம்பாறை உஹன திஸ்ஸபுர கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
இதேவேளை, விறுவிறுப்பாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட ஆடவர்களுக்கான இறுதிப் போட்டியில் மாரவில சேர்வியஸ் கல்லூரி அணியை எதிர்த்தாடிய ருவன்வெல்ல இராஜசிங்க கல்லூரி அணி 3-0 என்ற நேர் செட்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
அதேபால, குறித்த வயதுப் பிரிவில் ஆனமடுவ மத்திய கல்லூரியை வீழ்த்திய ஹுங்கம விஜயபா தேசிய பாடசாலை அணி மகளிருக்கான சம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க