இலங்கை டெஸ்ட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் தம்மிக பிரசாத் கடந்த எசெக்ஸ் அணியுடனான போட்டியின் போது தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணாமாக போட்டியின் நடுவில் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
தசுன் ஷானகவிற்கு கனவு டெஸ்ட் அறிமுகம்
இந்நிலையில் இவ்வார ஆரம்பத்தில் அவர் இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவர் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகி தனது தோற்பட்டையை முழுமையாகக் குணப்படுத்த தாயகம் திரும்பவுள்ளார். இவருக்குப் பதிலாக எந்த வீரர் இலங்கை டெஸ்ட் குழாமில் இணையப் போகிறார் என்ற செய்திகள் இன்னும் வெளிவரவில்லை.
இலங்கை அணியின் பயிற்றுனர் கிரஹம் போர்ட், நாளாந்த அடிப்படையில் அவர் அவதானிக்கப்பட்டு இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்குபெறுமளவுக்கு, அவரைத் தயார்படுத்த வேண்டிய தேவையிருப்பதாகக் கூறி இருந்தார். ஆனால் மருத்துவ அறிக்கைகளின் படி பிரசாத் முழுமையாகக் குணமடைய சில காலம் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்