மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை

181

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான டெவோன் தோமஸிற்கு கிரிக்கெட் சார்ந்த (All Cricket) அனைத்து வகை விடயங்களிலும் ஈடுபட ஐந்து ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடை வழங்கியுள்ளது.

>>பாகிஸ்தான் T20I குழாத்தில் இடம்பிடித்த ஹஸன் அலி!

34 வயது நிரம்பிய டெவோன் தோமஸ் இலங்கை கிரிக்கெட் சபை (SLC), மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) மற்றும் அமீரக கிரிக்கெட் சபை (ECB) ஆகியவற்றின் ஒழுங்கு விதிமுறைகளை 7 பிரிவுகளில் மீறியதன் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்டே ஐந்து ஆண்டு தடையினைப் பெற்றிருக்கின்றார்.

அதாவது டெவோன் தோமஸ் மேற்குறிப்பிட்ட கிரிக்கெட் சபைகளின் உள்ளூர் லீக் தொடர்களில் விளையாடிய போது ஆட்ட நிர்ணய சர்ச்சைகளில் சிக்கி அது தொடர்பான விசாரணைகளுக்கு சரியாக ஒத்துழைக்காமையின் காரணமாகவே தடையினைப் பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது,

ICC இன் ஊழல் தடுப்பு பிரதான அதிகாரியான அலெக்ஸ் மார்ஷல் டெவோன் தோமஸின் தடை பற்றி குறிப்பிடும் போது, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தடையானது கிரிக்கெட்டின் புனிதத்தில் கலங்கம் கொண்டு வர முற்படுவோருக்கு ஒரு பாடமாக அமையட்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2009ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்ற டெவோன் தோமஸ் இதுவரை ஒரு டெஸ்ட், 21 ஒருநாள் போட்டிகள் உள்ளடங்கலாக 12 T20I போட்டிகளில் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<