நியூசிலாந்து குழாத்தில் இருந்து வெளியேறும் கொன்வேய்

208

நியூசிலாந்தின் விக்கெட்காப்பு அதிரடி துடுப்பாட்டவீரரான டெவோன் கொன்வேய் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20I தொடரின் இறுதிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சுற்றுத்தொடரின் நடுவில் நாடு திரும்பும் இளம் சுழல்பந்துவீச்சாளர்

நியூசிலாந்து சென்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டியில் விரல் உபாதைக்கு முகம் கொடுத்த டெவோன் கொன்வேய் இதன் காரணமாகவே மூன்றாவது T20 போட்டியில் இருந்து விலகியிருக்கின்றார். 

அதேநேரம் டெவோன் கொன்வேயிற்குப் பிரதியீட்டு வீரராக டிம் செய்பார்ட் நியூசிலாந்து குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் 

டெவோன் கொன்வேய் தவிர வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜெகோப் டப்பி (Jacob Duffy) உம் நியூசிலாந்து குழாத்தில் மேலதிக வீரராக இணைவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆரம்பவீரரான டேவிட் வோர்னர் தசை உபாதை காரணமாக நியூசிலாந்து T20 தொடரில் இருந்து நீங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

நியூசிலாந்துஅவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி நாளை (25) ஒக்லேன்ட் நகரில் ஆரம்பமாகவிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை ஏற்கனவே அவுஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<