பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்திற்கு எதிராக இடம்பெற்ற 2020 AFC கிண்ண தகுதிகாண் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியின் முதல் கட்ட மோதலை (First Leg) இலங்கையின் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவு செய்துள்ளது.
கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் சர்வதேச அரங்கில் புதன்கிழமை (22) இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி 5ஆவது நிமிடத்தி சஜித் குமார முதல் கோலைப் பெற்று டிபெண்டர்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார். அணித் தலைவர் சுனில் ரொஷான் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை சஜித் குமார கோல் காப்பாளருக்கு கீழால் கம்பங்களுக்குள் செலுத்தினார்.
AFC தகுதிகாண் மோதலில் பாரோ அணியை சந்திக்கும் டிபெண்டர்ஸ்
இலங்கையின் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் AFC………
டிபெண்டர்ஸ் அணியின் முதல் கோல் பெறப்பட்டு 7 நிமிடங்களில் பாரோ வீரர்கள் தமக்கான முதல் கோலைப் பெற்றனர். டிபெண்டர்ஸ் கோல் எல்லைக்கு பந்தை எடுத்து வந்த ஷென்ஷோ பந்தை உள்ளனுப்ப, டெய்டோன் பபாஸ்ஸோ அதனை கம்பங்களுக்குள் ஹெடர் செய்தார்.
மீண்டும் 17ஆவது நிமிடத்தில் பாரோ அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது பபாஸ்ஸோ உள்ளனுப்பிய பந்தின் மூலம் கோல் பெறப்பட்டது. எனினும், அது ஓப் சைட் கோல் என நடுவரால் நிராகரிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வந்த பந்தை பபாஸ்ஸோ நெஞ்சினால் தட்டி பரிமாற்றம் செய்ய, பூட்டான் தேசிய அணி வீரர் ஷென்ஷோ கில்சென் கோலுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் ப்ரன்ஸின் தமது அணியின் திசையில் இருந்து உயர்த்தி உதைந்த பந்தை எவான்ஸ் பெற்று பாரோ கோல் காப்பாளர் கில்ஷென் ஸங்போவை தாண்டி எடுத்துச் சென்று மைதான எல்லையில் இருந்து கோலுக்குள் செலுத்தி போட்டியை மீண்டும் சமப்படுத்தினார்.
பங்களாதேஷிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது இலங்கை
இலங்கைக்கு எதிரான பங்கபந்து தங்கக் கிண்ண தொடரின்…….
முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் பாரோ முன்கள வீரர் கோல் எல்லையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்த பபாஸ்ஸோ வேகமாக கம்பங்களுக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.
முதல் பாதி: டிபெண்டர்ஸ் கா.க 2 – 3 பாரோ கா.க
இரண்டாம் பாதி ஆரம்பமாகி முதல் 10 நிமிடங்களிலும் பாரோ வீரர்களே தொடர்ச்சியாக கோலுக்கான வாய்ப்புக்களைப் பெற்றனர்.
போட்டியின் 63ஆவது நிமிடத்தில் டிபெண்டர்ஸ் வீரர் அசிகுர் ரஹ்மான் மத்திய களத்தில் இருந்து உயர்த்தி செலுத்திய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்த எவான்ஸ் உதையத் தவினார். எனினும், அவருக்குப் பின்னால் இருந்த சஜித் குமார பந்தை கோலாக்கி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்ய மீண்டும் போட்டி சமநிலையானது.
அடுத்த 5 நிமிடங்களில் பாரோ வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான முயற்சியை டிபெண்டர்ஸ் கோல் காப்பாளர் மொஹமட் லுத்பி வேகமாக முன்னே வந்து தடுத்தார்.
மீண்டும் 76ஆவது நிமிடத்தில் பாரோ வீரர்கள் கோலுக்கு அண்மையில் இருந்து கம்பங்களுக்கு செலுத்திய பந்தையும் லுத்பி பாய்ந்து பற்றிக்கொண்டார்.
Photos: Defenders FC (SRI) v Paro FC (BHU) | Pre-Match Press Conference | 1st Leg | AFC Cup 2020
ThePapare.com | Viraj Kothalawala | 21/01/2020 Editing……
80 நிமிடங்களின் பின்னர் இரண்டு அணி வீரர்களும் அடுத்தடுத்து பல வாய்ப்புக்களைப் பெற்ற போதும் கோல் பெறுவதற்கான வாய்ப்புக்கள் வீணடிக்கப்பட்டன. இதில் சஜித் குமாரவுக்கு கிடைத்த இலகுவான வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.
போட்டியின் 90ஆவது நிமிடம் கடந்த பின்னர் டிபெண்டர்ஸ் அணியினருக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஸங்போ தட்டிவிட்டார். மீண்டும் அதனை ப்ரன்சிஸ் கோல் நோக்கி உதைய ஸங்போ பந்தைப் பிடித்தார்.
எனவே, இரண்டாவது பாதியில் டிபெண்டர்ஸ் வீரர்கள் பெற்ற ஒரே கோலுடன் போட்டி முழு நேர முடிவில் 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்த மோதலின் இரண்டாம் கட்டப் போட்டி இந்த மாதம் 29ஆம் திகதி பூட்daaனின் திம்புவில் இடம்பெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவின் பெங்களூர் கால்பந்து கழகத்துடன் அடுத்த சுற்றில் மோதும்.
முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா.க 3 – 3 பாரோ கா.க
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – டெய்டோன் பபாஸ்ஸோ (பாரோ கா.க)
கோல் பெற்றவர்கள்
டிபெண்டர்ஸ் கா.க – சஜித் குமார 5’ & 63’, எவான்ஸ் அசன்டே 36’
பாரோ கா.க – டெய்டோன் பபாஸ்ஸோ 12’ & 45+2’, ஷென்ஷோ கில்சென் 24’
மஞ்சள் அட்டை
பாரோ கா.க – ஸ்டீபன் டாங் 80’, கலி சங்போ 85’, கில்ஷென் ஸங்போ 86’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<