தென்னாபிரிக்கா டெஸ்ட் அணி தலைமையை குறிவைக்கும் டீன் எல்கர்

186

டெஸ்ட் போட்டிகளுக்கான தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவராகப் பொறுப்பேற்க டீன் எல்கர் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த பாப் டு ப்ளெஸ்சிஸ், இவ்வருட முற்பகுதியில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் டெஸ்ட் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்

இந்திய – தென்னாபிரிக்க T20 தொடர் ஒகஸ்டிலா??

இதனையடுத்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக் டெஸ்ட் அணிக்கும் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், டி கொக்கிற்கு அதிகமாக சுமையை கொடுக்க விரும்பவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அவரை தலைவராக நியமிக்கமாட்டோம் என்று தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் இயக்குனர் கிரேம் ஸ்மித் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்

இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியின் டெஸ்ட் அணித் தவைவர் பதவி கொடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன் என்று அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டீல் எல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் டெஸ்ட் அணி தலைவர் பதவி என்பது உண்மையிலேயே எளிதான பயணம் கிடையாது. ஆனால், தலைமைத்துவம் என்பது எனக்கு இயல்பாகவே இருக்கக் கூடியது.

கடந்த காலங்களில் நான் தலைவராகப் பணியாற்றியுள்ளேன். பாடசாலை, மாகாணம் மற்றும் லீக் போட்டிகளில் உள்ள அணிகளுக்கு தலைவராக இருந்துள்ளேன். இயல்பாகவே அந்தப் பணியை ரசித்து செய்துள்ளேன். எனவே தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் பதவி ஏற்க வேண்டும் என்றால், நிச்சயம் அதை ஏற்றுக் கொள்ளத் தயார் என அவர் தெரிவித்தார்

33 வயதான டீன் எல்கர் தென்னாபிரிக்கா டெஸ்ட் அணிக்காக இரண்டு முறை தலைவராக பணியாற்றியுள்ளார். 2017 லோர்ட்ஸ் டெஸ்டில் தென்னாபிரிக்கா அணி 211 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.  

அதேபோல, பாகிஸ்தானுக்கு எதிராக 2019இல் 107 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சனின் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

எனினும், தென்னாபிரிக்கா அணியின் மற்றுமொரு அனுபவமிக்க வீரரான எய்டன் மார்க்ரம் மற்றும் சுழல் பந்துவீச்சாளரான கேஷவ் மகராஜ் ஆகிய இருவரும் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்திருந்தனர். 

இதனிடையே, தென்னாபிரிக்கா அணி எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<