இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், வருடாந்த ஒப்பந்தத்தில் கையழுத்திடுவதற்கான கால எல்லை, நாளை வரை (06) நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
>> இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் அவிஷ்க, ஓசத மற்றும் நுவன் பிரதீப்
இலங்கை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில், கையழுத்திடுவதற்கான கால எல்லை கடந்த மூன்றாம் திகதிவரை வழங்கப்பட்டிருந்த போதும், ஒப்பந்தம் நியாயமற்றது மற்றும் வெளிப்படையானதல்ல என சுட்டிக்காட்டி வீரர்கள் கையழுத்திட மறுத்து வருகின்றனர்.
அந்தவகையில், வீரர்கள் ஒப்பந்தத்தில் கையழுத்திடுவதற்கான கால எல்லையை நாளைய தினம் (06) வரை நீடித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய அதிகாரி ஒருவர் “டெய்லி நியூஸ்” ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “நாம் எதிர்வரும் ஆறாம் திகதிவரை வீரர்களுக்கு காலத்தை கொடுத்துள்ளோம். குறித்த காலப்பகுதிக்குள் வீரர்கள் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்திற்கு ஏற்றுக்கொள்ளலாம். இல்லையெனில், ஒவ்வொரு தொடர்களுக்குமான ஒப்பந்த அடிப்படையில் விளையாட முடியும்” என்றார்.
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை முடித்துள்ள இலங்கை அணி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தநிலையில், குறித்த தொடருக்கு முன்னதாக வீரர்கள் ஒப்பந்தத்தில் கையழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<