60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 26ஆவது போட்டி இன்று மாலை டில்லியில் அமைந்துள்ள பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கவ்தம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவ்தம் கம்பீர் முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது. டெல்லி அணி சார்பாக கருன் நயிர் 50 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களையும், செம் பிளிங்க்ஸ் 34 பந்துகளில் 54 ஓட்டங்களையும், கார்லஸ் பரத்வையிட் 11 பந்துகளில் 34 ஓட்டங்களையும் பெற்றனர். கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் என்டர் ரசல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
மிலரின் தலைமைப் பதவி விஜேயிற்கு
பதிலுக்கு 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் இப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது. நயிட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 72 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 21ஓட்டங்களையும், என்டர் ரசல் 12 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் சஹீர் கான் மற்றும் கார்லஸ் பரத்வையிட் ஆகியோர் தலா 3 விக்கட்டுகள் வீதம் கைப்பற்ற க்றிஸ் மொரிஸ் மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கார்லஸ் பரத்வையிட் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்