கோல் மழை பொழிந்த ரெட் ஸ்டார்; ரினௌன், ரட்ணம் அணிகளுக்கு வெற்றி

1381

டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய மூன்று போட்டிகள் கடந்த புதன்கிழமை நடைபெற்றன. இதில் ரெட் ஸ்டார்ஸ் அணி கோல் மழை பொழிந்து இலகு வெற்றியீட்டியதோடு ரினௌன் மற்றும் ரட்ணம் அணிகளும் வெற்றிபெற்றன. இந்த போட்டிகளின் விபரம் வருமாறு.

ஜாவா லேன் வி.க. எதிர் ரட்ணம் வி.க.

பதில் வீரர் மொஹமட் சபீர் பெற்ற பிந்திய கோல் மூலம் ரட்ணம் கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாவா லேன் அணியை வீழ்த்தியது.

மோதலில் முடிந்த கொழும்பு – புளூ ஸ்டார் போட்டி

களுத்துறை புளூ ஸ்டார் மற்றும்…

சிட்டி கால்பந்து வளாகத்தில் தொடரின் 6ஆவது வராத்திற்காக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் குறிப்பிடும்படி சோபிக்கவில்லை. நவீன் ஜூட்டின் முயற்சியின்போது பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் பறந்தது. குறிப்பாக ஜாவா லேன் வீரர்கள் தமது வாய்ப்பை சாதகமாக்கிக் கொள்ள தவறினர்.  

முதல் பாதி: ஜாவா லேன் வி.க 0-0 ரட்ணம் வி.க

இரண்டாவது பாதியில் ரட்ணம் தனது ஆட்டத்தில் வேகத்தை அதிகரித்துக் கொண்டதோடு மறுபுறம் ஜாவா லேன் வீரர்கள் மத்திய களத்தில் தடுமாற்றம் கண்டனர். எனினும், இரு அணிகளினதும் கோல்பெறும் முயற்சிகள் வீணாகின. போட்டி கடைசி நிமிடங்களை அடையும்போது பரபரப்பு அதிகரித்தது.

இந்நிலையில் 84 ஆவது நிமிடத்தில் வைத்து ரட்ணம் வீரர் மொஹமட் சபீர் கோல் ஒன்றை போட்டு அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

தொடர்ந்து போட்டியின் மோலதிக நேரத்தில் வைத்து ஜாவா லேன் வீரர் மொஹமட் ரிஷான் சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: ஜாவா லேன் வி.க 0-1 ரட்ணம் வி.க

கோல் பெற்றவர்கள்

  • ரட்ணம் வி.க. – மொஹமட் சபீர் 84′
  • மஞ்சள் அட்டை
  • ஜாவா லேன் வி.க. – மொஹமட் ரிஷான் 90′ & 90+3′
  • ரட்ணம் வி.க. – எல்லூஹ் மெடஹான் 13′
  • சிவப்பு அட்டை
  • மொஹமட் ரிஷான் – 90+3′

Photos : Renown SC v Matara City | Week 7 | Dialog Champions League 2018

ரினௌன் வி.க. எதிர் மாத்தறை சிட்டி வி.க.

களனி கால்பந்து வளாகத்தில் 7 ஆவது வாரத்திற்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் ரினௌன் அணி பதில் கோல்கள் திருப்பி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் மாத்தறை சிட்டி அணியை வீழ்த்தியது.

இந்த தொடரில் ரனௌன் 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5 ஆவது இடத்திலும் மாத்தறை சிட்டி அணி 9 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும் இருந்த நிலையிலேயே இந்தப் போட்டியில் களமிறங்கின.  

மாத்தறை சிட்டி கோலை நோக்கி முதல் உதையை செலுத்தியபோதும் அந்தப் பந்து ரினௌன் கோல் காப்பளரின் கைகளுக்கு நேராக சென்றது. மொஹமட் முஜீப் பந்தை சிறப்பாக பரிமாற்றியபோது ரினௌன் அணிக்கு கோல் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. எனினும், டிலிப் பீரிஸ் தலையால் முட்டிய பந்து இலக்கை நோக்கி செல்லவில்லை.  

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஒன்றை பெற போராடியபோதும் பந்து வலைக்குள் செல்லவில்லை.  

முதல் பாதி: ரினௌன் வி.க 0 – 0 மாத்தறை சிட்டி வி.க

2ஆவது பாதியின் ஆரம்பத்தில் சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியதற்கு அந்த அணிக்கு பலன் கிடைத்தது. 55 ஆவது நிமிடத்தில் வைத்து லார்பி பிரின்ஸ் ரினௌன் பின்கள வீரர்களை முறியடித்து பந்தை கடத்தி வந்து வலைக்குள் செலுத்தினார்.

Photos : Java Lane SC v Ratnam SC – Week 6 | Dialog Champions League 2018

எனினும் ரினௌன் முன்கள வீரர் எதிரணி பெனால்டி எல்லைக்குள் கீழே வீழ்த்தப்பட்டதால் அந்த அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. அணித்தலைவர் பிரன்சிஸ் அக்பெடி வேகமாக பந்தை வலைக்குள் செலுத்தி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார்.  

போட்டி இறுதித் தருணங்களை எட்டும்போது ரினௌன் தனது தாக்குதல் ஆட்டத்தை அதிகரித்துக் கொண்டது. மேலதிக நேரத்தில் மரியதாஸ் நிதர்ஷன் ரினெளன் அணிக்கு வெற்றி கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.

இந்த வெற்றியுடன் ரினௌன் விளையாட்டுக் கழகம் டயலொக் சம்பியன்ஸ் லீக் தரப்படுத்தலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

முழு நேரம்: ரினௌன் 2 – 1 மாத்தறை சிட்டி

கோல் பெற்றவர்கள்

  • ரினௌன் வி.க. – பிரன்சிஸ் அக்படி 68′, மரியதாஸ் நிதர்ஷன் 90+3
  • மாத்தறை சிட்டி வி.க. – லார்பி பிரின்ஸ் 55′
  • மஞ்சள் அட்டை
  • ரினௌன் வி.க. – மொஹமட் முஜீப் 74′
  • மாத்தறை சிட்டி வி.க. – பிரின்ஸ் 61′

ரெட் ஸ்டார் கா.க. எதிர் டிபெண்டர்ஸ் கா.க.

டிலக்ஷனின் ஹட்ரிக் கோல் உதவியுடன் எப்.ஏ கிண்ண நடப்புச் சம்பியன் டிபெண்டர்ஸ் அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த ரெட் ஸ்டார் அணி 5-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றி ஒன்றை பெற்றது.

களுத்துறை பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கே.ஏ. டிலக்ஷன் 2 ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியதோடு 40 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை நுழைத்தார். இந்நிலையில் ரமீஸ் 15 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற ரெட் ஸ்டார் அணி முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது.  

முதல் பாதி: ரெட் ஸ்டார் கா.க 3-0 டிபெண்டர்ஸ் கா.க

எதிரணியின் ஆதிக்கத்தை முறியடிக்க தடுமாறிய டிபெண்டர்ஸ் அணியின் பின்கள ஆட்டமும் பலவீனமாக இருந்தது. இதனால், ரெட் ஸ்டார் இரண்டாவது பாதியிலும் எதிரணி கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தது.

இரண்டாவது பாதியின் 54 ஆவது நிமிடத்தில் ஓ.ஐ. அபுமேரே கோல் ஒன்றை புகுத்தினார். இந்நிலையில் முதல் பாதியில் இரண்டு கோல்களை புகுத்திய டிலக்ஷன் 84 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப் பெற்று தனது ஹெட்ரிக்கைப் பதிவு செய்தார்.

முழு நேரம்: ரெட் ஸ்டார் கா.க 5-0 டிபெண்டர்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள்

  • ரெட் ஸ்டார கா.க. – டிலக்ஷன் 2′, 40′, 84′, ரமீஸ் 15′, ஓ.ஐ. அபுமேரே 54′

மஞ்சள் அட்டை

  • ரெட் ஸ்டார் கா.க. – அன்ட்ரியான் இல்ஹாய்

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க