சுகததாச அரங்கில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது வாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் சுப்பர் சன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இரண்டாவது பாதியில் 7 கோல்கள் புகுத்திய கொழும்பு கால்பந்து கழகம் 8-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியில் தமக்கு சாதகமான சூழலில் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தும் எதிர்பார்ப்புடனேயே கொழும்பு கால்பந்து கழகம் களமிறங்கியது. மூன்று முன்கள வீரர்களான மொஹமட் ஆகிப், மொஹமட் பசால் மற்றும் பொட்ரிக்ஸ் டிமித்ரி ஆகியோருடன் மத்திய களத்தில் மொஹமட் ரிப்னாஸ் ஆரம்பத்தில் கொழும்பு கால்பந்து கழகத்திற்காக பந்தை நேர்த்தியாக பரிமாற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
AFC 23 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை B குழுவில்
இரண்டாவது நிமிடத்திலேயே கோல் பெறும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தபோது மொஹமட் பசால் பந்தை நிரான் கனிஷ்கவிடம் அனுப்பினார் எனினும் அதனை சுப்பர் சன் பின்கள வீரர்கள் தடுத்தனர்.
நீண்ட தூரத்தில் இருந்து மொஹமட் ரிப்னாஸ் பந்தை கனிஷ்கவிடம் செலுத்தியபோது அவர் அதனை மொஹமட் ஆகிப்பின் கால்களுக்கு பரிமாற்றினார். கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமான தூரத்தில் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை மொஹமட் ஆகிப் தவறவிட்டார்.
கோல் பெறும் வாய்ப்புகள் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன. இதனால் முதல் 15 நிமிடங்களில் சுப்பர் சன் அணி போட்டியில் நிலைபெறுவதில் கடும் போராட்டத்தை சந்தித்தது.
எனினும் போட்டியில் ஆதிக்கம் செலுத்த முயன்ற சுப்பர் சன் கழகம் பி. ஷிவங்க உதைத்த பந்து எதிரணி கோல்காப்பாளர் மொஹமட் இர்பானுக்கு கடும் சவாலாக இருந்தது.
எனினும் சுப்பர் சன் அணி விட்டுக்கொடுத்த தேவையற்ற பிரீ கிக் வாய்ப்பு மூலமே கொழும்பு கால்பந்து கழகம் தனது முதல் கோலை பெறும் வாய்ப்பை பெற்றது. 42 ஆவது நிமிடத்தில் பொட்ரிக்ஸ் டிமித்ரி அந்த கோலைப் போட்டார்.
முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 1 – 0 சுப்பர் சன் விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆட்டத்தில் சுப்பர் சன்னை கொழும்பு கால்பந்து கழகம் முழுமையாக வீழ்த்தியது. 50 ஆவது நிமிடத்தில் நிரான் கனிஷ்க பந்தை பொட்ரிக்ஸ் டமித்ரியின் வழியில் செலுத்த அவர் கோல்காப்பாளரை முறியடித்து வலைக்குள் செலுத்தினார்.
பின்னர் ஒரு நிமிடம் கழித்து சுப்பர் சன் பின்கள வீரர்கள் ஓப் சைட் பொறிக்குள் சிக்கவைக்க முயற்சிக்க அதனை முறியடித்து டிமித்ரி பரிமாற்றிய பந்தை மொஹமட் ஆக்கிப் கோலாக மாற்றினார்.
மற்றுமொரு நிமிடத்தின் பின் பொட்ரிக்ஸ் வழங்கிய பந்தை மொஹமட் பசால் தலையால் முட்டி வலைக்குள் செலுத்த கொழும்பு கால்பந்து கழகம் 4-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.
சுப்பர் சன் கழகம் பதில் கோல்காப்பாளரை அனுப்பியபோதும் அது எந்த பயனும் தரவில்லை. பொட்ரிக் இடது காலால் மின்னல் வேகத்தில் உதைத்த பந்து கோல்காப்பாளரையும் தாண்டி வலைக்குள் செல்ல அவர் தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்தார்.
போட்டி 60 நிமிட நேரத்தை எட்டும்போது 5-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த கொழும்பு கால்பந்து கழகம் பல மாற்றங்களை செய்தது. மாற்று வீரராக வந்த சப்ரான் சத்தார் வந்த விரைவிலேயே எதிரணி கோல்காப்பாளர் மொஹமட் ஹர்பான் தற்செயலாக அவர் பக்கம் பந்தை உதைக்க அவர் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு ஆறாவது கோலாக மாற்றினார்.
இலங்கை அணியில் இருந்து விலகும் சந்திமால்: அசலங்க அணியில் இணைப்பு
ஒரு நிமிடம் கழித்து பெனால்டி எல்லைக்குள் சப்ரான் வீழ்த்தப்பட அதன் மூலம் கிடைத்த ஸ்பொட் கிக் வாய்ப்பைக் கொண்டு மொஹமட் ரிப்னாஸ் மற்றொரு கோலை புகுத்தினார்.
இந்நிலையில் மொஹமட் பசால் மற்றும் மொஹமட் ரிப்னாஸ் பந்தை சிறப்பாக கடத்திச் சென்று கடைசியில் ரிப்னாஸ் எதிரணியின் வலைக்குள் செலுத்தினார்.
இரண்டாவது பாதியில் அனுபவம் பெற்ற சுப்பர் சன் எதிரணிக்கு எந்த போட்டியும் கொடுக்காத நிலையிலும் கொழும்பு கால்பந்து கழகம் கடைசி நிமிடம் வரை அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை காண முடிந்தது.
முழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 8 – 0 சுப்பர் சன் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்து கழகம் – பொட்ரிக்ஸ் டிமித்ரி 42′ 50′ & 60′, மொஹமட் பசால் 52′, சப்ரான் சத்தார் 63′, மொஹமட் ரிப்னாஸ் 67′ (பெனால்டி), 73′
மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்து கழகம் – மொஹமட் ஆகிப் 25′
சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் – பி. ஷிவன்க 46′, மொஹமட் ஹர்பான் 67′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<