இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டுபாயில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிகளின் ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக நடத்துவதற்கு இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலுமான 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட முத்தரப்பு தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ளது. எனினும் குறித்த போட்டித் தொடர் தொடர்பான திகதிகள் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவுடனான இறுதி டெஸ்டில் இருந்து ஹேரத் விலகினார்
இலங்கை டெஸ்ட் அணியின் அனுபவமிக்க இடதுகை சுழற்பந்து வீச்சாளரான..
இலங்கை கிரிக்கெட் அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றை நடத்துவது குறித்து மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தமது கருத்தை அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.
இலங்கை அணியானது இதுவரை எந்தவொரு பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியதில்லை. எனினும், பாகிஸ்தான் அணி இரண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டுபாயிலும், மற்றைய போட்டி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியாகவும் இடம்பெற்றன.
இதுவரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 51 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 14 போட்டிகளில் இலங்கை அணியும், 19 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
எனினும், அண்மைக்கால தரவுகளை எடுத்துப் பார்க்கும்பொழுது இலங்கை அணி சகலவிதமான போட்டிகளிலும் தொடர்ந்து மோசமான திறமையையே வெளிப்படுத்தி வருகின்றது.
மொயின் அலியின் சகலதுறை ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி
மொயின் அலியின் சிறந்த சகலதுறை ஆட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுடனான…
இறுதியாக இலங்கை அணி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. எனினும், 2-1 என்ற போட்டிகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அத் தொடரை பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு நிலையில், பகலிரவு டெஸ்ட் ஆட்டம் ஒன்றுக்காக இலங்கை அணி தயாராவதென்றால், எந்தவித முன் அனுபவமும் இல்லை என்பதனால் பல சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.