அவுஸ்திரேலிய நட்சத்திர அதிரடி துடுப்பாட்டவீரரான டேவிட் வோர்னருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் சபை (CA) அணித்தலைவராக செயற்பட வழங்கியிருந்த வாழ்நாள் தடை நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>இலகு வெற்றியுடன் ஒருநாள் தொடரினை கைப்பற்றிய இலங்கை<<
டெஸ்ட் போட்டியொன்றில் நடைபெற்ற பந்துசேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கியதன் காரணமாக குறித்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதி தலைவராக காணப்பட்ட டேவிட் வோர்னருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஓராண்டுகாலத் போட்டித்தடை வழங்கப்பட்டதோடு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அணித்தலைவராக செயற்பட வாழ்நாள் தடையினையும் வழங்கியது.
இந்த நிலையில் தற்போது 37 வயது நிரம்பிய டேவிட் வோர்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும் அவருக்கு இருக்கும் தலைவர் தடை காரணமாக அவுஸ்திரேலியாவின் உள்ளூர் லீக் போட்டிகளில் அணிகளை வழிநடாத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையில் இது தொடர்பில் ஆய்வு செய்த மூவர் அடங்கிய குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் டேவிட் வோர்னருக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் அணித்தலைவர் தடை நீக்கப்பட்டிருக்கின்றது.
எனவே டேவிட் வோர்னர் தற்போது அவுஸ்திரேலியாவின் உள்ளூர் பிக் பேஷ் லீக் தொடரில் விளையாடி வருகின்ற சிட்னி தண்டர் அணியின் தலைவராக செயற்பட தடைகள் நீங்கியிருக்கின்மை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<