சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கிய டேவிட் வோர்னர்

92

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான டேவிட் வோர்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

முன்னணி வீரர்கள் நீக்கம் ; இளம் வீரர்களுடன் ஜிம்பாப்வே செல்லும் இந்தியா!

சுமார் 15 வருட காலம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை பிரதிநித்துவம் செய்த டேவிட் வோனர் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தினை அடுத்து, ஒருநாள் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கியிருந்ததோடு அதன் பின்னர் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் பாகிஸ்தான் தொடரோடு டெஸ்ட் போட்டிகளுக்கும் ஓய்வு வழங்கியிருந்தார். 

இந்த நிலையில் T20 சர்வதேச போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியினை தொடர்ந்து பிரதிநிதித்துவம் செய்த அவர், தற்போது நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி போட்டிகளுக்கு அவுஸ்திரேலியா  தெரிவாகததனை அடுத்து அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் பிரியாவிடை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 

அந்தவகையில் டேவிட் வோனர் இறுதியாக விளையாடிய சர்வதேச போட்டியாக அவுஸ்திரேலிய அணி இந்தியாவுடன் ஆடிய T20 உலகக் கிண்ண சுப்பர் 8 மோதல் அமைந்திருந்தது. குறித்த போட்டியில் வோனர் 06 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

37 வயது நிரம்பிய டேவிட் வோர்னர் அவுஸ்திரேலிய அணிக்காக இதுவரை 110 T20I போட்டிகளில் ஆடியிருப்பதோடு ஒரு சதம் 28 அரைச்சதங்கள் அடங்கலாக 3277 ஓட்டங்களை குவித்திருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<