விராட் கோஹ்லியின் சாதனையை தட்டிப்பறித்த டேவிட் வோர்னர்

251
David Warner
@Iplt20.com

சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் நேற்று (18) அபுதாயில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான 35ஆவது லீக் போட்டியில் விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்ததுடன், முதல் வெளிநாட்டு வீரராகவும் வரலாற்றில் சாதனை படைத்தார். 

>> டுவைன் பிராவோவுக்கு அடுத்த போட்டிகளில் ஆட முடியாத நிலை

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் தற்சமயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் நிலையில் நாளுக்கு நாள் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருவதுடன், புதிய சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றது

இப்போட்டியில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய வேளையில் அவ்வணி சார்பாக அதிகபட்ச ஓட்டமாக அணித்தலைவர் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை குவித்தார். இப்போட்டியில் டேவிட் வோர்னர் 10 ஓட்டங்களை பூர்த்தி செய்த வேளையில் இந்தியன் ப்ரீமியர் லீக் வரலாற்றில் 5,000 ஓட்டங்களை பூர்த்தி செய்தார்

டேவிட் வோர்னர் 135 இன்னிங்ஸ்களில் இவ்வாறு 5,000 ஓட்டங்களை கடந்ததன் மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் வரலாற்றில் அதிவேக (குறைந்த இன்னிங்ஸ்களில்) 5,000 ஓட்டங்களை கடந்து, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சாதனையை 22 இன்னிங்ஸ்கள் முன்னிலையில் தட்டிப்பறித்தார்

>> IPL தொடரில் சுனில் நரைனின் சாதனையை முறியடித்த ரபாடா

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் .பி.எல் தொடரில் விளையாடிவரும் டேவிட் வோர்னர் டெல்லி டெயார்டெவில்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகளில் விளையாடி இவ்வாறு 5,000 ஓட்டங்களை பூர்த்தி செய்துள்ளார்

13 வருட .பி.எல் வரலாற்றில் இதுவரையில் விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹிட் சர்மா மற்றும் டேவிட் வோர்னர் ஆகிய 4 வீரர்கள் மாத்திரமே 5,000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதில் டேவிட் வோர்னர் முதல் வெளிநாட்டு வீரராக 5,000 ஓட்டங்களை கடந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அதிவேக 5,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் 

  1. டேவிட் வோர்னர் (2009-2020) 135 இன்னிங்ஸ்
  2. விராட் கோஹ்லி (2008-2020) 157 இன்னிங்ஸ்
  3. சுரேஷ் ரெய்னா (2008-2019) 173 இன்னிங்ஸ்
  4. ரோஹிட் சர்மா (2008-2020) 187 இன்னிங்ஸ்  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<