ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் டேவிட் ஹோக்டன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டேவிட் ஹோக்டனுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை திட்டமிட்டிருந்த நிலையில் இவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
>> ஐசிசி தரவரிசையில் இந்திய வீரரை முந்திய ஆதில் ரஷீட்
ஜனவரி மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜிம்பாப்வே அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. குறித்த இந்த தொடரில் தலைமை பயிற்றுவிப்பாளரின்றி ஜிம்பாப்வே அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைமை பயிற்றுவிப்பாளருக்கு பதிலாக இலங்கை தொடருக்கான தொழிநுட்பக் குழு ஒன்றை நியமிக்கவும் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது.
ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த 18 மாதங்களாக டேவிட் ஹோக்டன் செயற்பட்டுவந்தார். இவரின் பதவிக்காலத்தில் சடுதியான முன்னேற்றங்களை ஜிம்பாப்வே அணி காட்டியிருந்த போதும், இறுதியாக T20 உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை இழந்திருந்தது.
இவ்வாறான நிலையில் புதிய பாதை ஒன்றில் ஜிம்பாப்வே அணி செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக தன்னுடைய பதவியிலிருந்து விலகியுள்ளதாக டேவிட் ஹக்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<