அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இலங்கை அணிக்கு 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த பயிற்சியாளருமான டேவ் வட்மோரை பரோடா ரஞ்சி கிண்ண அணி தமது பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு
இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர்….
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவ் வட்மோர், கடந்த மூன்று ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடர்களில் கேரளா அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
இந்நிலையில் ரஞ்சி கிண்ண அணிகளில் ஒன்றான பரோடா அணி, தற்போது டேவ் வட்மோரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, கடந்த மூன்று பருவங்களில் கேரளா பயிற்சியாளராக இருந்த வட்மோர், சனத் குமாருக்கு பதிலாக பரோடாவின் ரஞ்சி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். அடுத்த இரண்டு பருவங்களுக்கு அவர் பரோடா அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கான அனைத்து வேலைகளையும் பரோடா கிரிக்கெட் சங்கம் செய்து முடித்துள்ளது. எனினும், கொரோனா வைரஸ் காரணமாக டேவ் வட்மோர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதால் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் காலதாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
66 வயதாகும் வட்மோர் பயிற்றுவிப்பில்தான் 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. மேலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜிம்பாப்வே அணிகளுக்கும் அவர் பயிற்சியாளராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<