நீலங்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையிலான 142ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி (Big Match) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
IPL ஆடுவது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க
142ஆவது நீலங்களின் சமர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட போதும், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த போட்டியானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது இந்த கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டுக்குழு (JOC) அறிவித்திருப்பதன் அடிப்படையில், 142ஆவது நீலங்களின் சமர் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பார்வையாளர்கள் எவருமின்றி நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
”(நீலங்களின் சமர் என்னும்) இந்த கிரிக்கெட் போட்டியானது இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் அறிவுரைகளுக்கு அமைவாக கடுமையான நிபந்தனைகளுக்குள் பார்வையாளர்கள் எவருமின்றியும், இதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுகள் எதுவுமின்றியும் இடம்பெறவிருக்கின்றது.”
கவுண்டி அணிக்காக ஆடவுள்ள திமுத் கருணாரட்ன
இதேநேரம், இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் ஏற்பாட்டுக் குழுவானது இந்தப் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஏனைய போட்டி உத்தியோகத்தர்கள் அனைவரும் 21 நாட்கள் கொண்ட உயிர் பாதுகாப்பு வளையினுள் காணப்படுவார்கள் எனக் கூறியிருக்கின்றது.
அதேநேரம், இந்த கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதால், போட்டியினை ThePapare.com மற்றும் Dialog Television ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<