இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி அடைந்த மோசமான தோல்வி மற்றும் தசுன் ஷானகவின் பிரகாசிப்பின்மை காரணமாக தசுன் ஷானக அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
>> முக்கிய வேகப் பந்துவீச்சாளரை இழக்கும் நியூசிலாந்து அணி?
எனினும் தசுன் ஷானக தொடர்ந்தும் தலைவராக செயற்படுவதற்கான தீர்மானத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் இலங்கையும் உலகக்கிண்ணத்துக்கான குழாத்தை இதுவரை அறிவிக்கவில்லை. எதிர்வரும் 28ம் திகதி குழாத்தை அறிவிப்பதற்கான இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியானது உலகக்கிண்ணத் தொடருக்காக எதிர்வரும் 26ம் திகதி இந்தியா புறப்படவுள்ளது. எனவே எதிர்வரும் தினங்களில் இலங்கை குழாம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<