உடன் அமுலுக்கு வரும் வகையில் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ளது. நிலுவையில் உள்ள நடத்தை விதி மீறல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடருக்கான குணதிலக்கவின் போட்டிக் கட்டணமும் நிறுத்தி வைக்கப்படுவதோடு, இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்ததன் பின் மேலதிக இடைநீக்கம் அமுலுக்கு வரவுள்ளது.
ஒழுக்க விதிமுறைகளை மீறிய இலங்கை வீரருக்கு கடும் எச்சரிக்கை
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு…
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘இலங்கை கிரிக்கெட்டால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையில், அணி முகாமையாளர் அந்த வீரர் நடத்தை விதியை மீறியதாக முறையிட்டதை அடுத்தே இடைநிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது‘ என கூறப்பட்டுள்ளது.
குணதிலக்கவின் குறுகிய கால கிரிக்கெட் வாழ்வு சர்ச்சைகள் கொண்டதாக உள்ளது. T20 முக்கோண தொடரில் தமிம் இக்பாலுக்கு வெளியேற சமிக்ஞை செய்த குணதிலக்கவுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, பயற்சியில் பங்கேற்காததற்காக அவர் மீது ஆறு ஒரு நாள் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டது. பின்னர், அணிக்கு திரும்பிய வேகத்திலேயே பயிற்சியின் போது மோசமான நடத்தையை வெளிப்படுத்தியது கண்டறியப்பட்டது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் இரண்டு அரைச்சதங்களை பெற்று சோபித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<