தனிஷ்க குணதிலக்கவின் தடை நீக்கம்

Sri Lanka Cricket

1156

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தனிஷ்க குணதிலக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை கிரிக்கெட் சபை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார். 

லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது! 

குறித்த குற்றச்சாட்டுக்கான வழக்கு விசாரணை நிறைவில் தனிஷ்க குணதிலக்கவை சிட்னி நீதிமன்றம் விடுவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இவர் நாட்டுக்கு திரும்பியுள்ளார். 

இந்தநிலையில் தனிஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மூன்று பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் விசாரணைக்குழு, அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் என்பவையை அவதானித்து பரிந்துரை ஒன்றை முன்வைத்திருந்தது. 

அதன்படி தனிஷ்க குணதிலக்கவுக்கு எதிரான தடையை நீக்கி, அவருடைய நாளாந்த கிரிக்கெட் நடவடிக்கைகளை தொடரவும், தேசிய கிரிக்கெட் பணியை ஆரம்பிக்க அனுமதியை வழங்க முடியும் என்ற பரிந்துரையை விசாரணைக்குழு இலங்கை கிரிக்கெட் சபையிடம் முன்வைத்தது. 

குறித்த இந்த பரிந்துரை கடந்த 13ம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகக்குழுவின் சந்திப்பின் போது ஆராயப்பட்டதுடன், தனிஷ்க குணதிலக்கவின் தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<