Home Tamil மெதிவ்ஸின் அரைச்சதம் வீண்; மாலிங்கவின் அணிக்கு இரண்டாவது வெற்றி

மெதிவ்ஸின் அரைச்சதம் வீண்; மாலிங்கவின் அணிக்கு இரண்டாவது வெற்றி

478

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காக கொண்டு நடைபெற்று வருகின்ற மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் இன்றைய தினம் (06) இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

காலி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்திருந்த தம்புள்ளை அணி, 76 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஐ.பி.எல் தொடரை அடுத்து மாகாண ஒரு நாள் தொடரிலும் அசத்திய லசித் மாலிங்க

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் குழாத்தினை தெரிவு செய்யும்…

துடுப்பாட்டத்தில் காலி அணி சார்பில் தனன்ஞய டி சில்வா, லஹிரு திரிமான்ன மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் அரைச்சதம் கடந்து அசத்த, தம்புள்ளை அணிக்காக அதன் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

ரங்கிரி, தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 3ஆவது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தம்புள்ளை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லசித் மாலிங்க தலைமையிலான காலி அணிக்கு வழங்கினார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சந்துன் வீரக்கொடி மற்றும் லஹிரு திர்மான்ன ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களை பதிவு செய்தனர். முதல் போட்டியில் அரைச் சதம் கடந்த சந்துன் வீரக்கொடி, இந்தப் போட்டியில் 44 ஓட்டங்களுடன் இஷான் ஜயரத்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மாலிங்க அணியுடனான இறுதிப் போட்டிக்கு சந்திமால் அணி தெரிவு

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தனன்ஞய டி சில்வா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்ட அதேவேளை அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

இதில் தனன்ஞய டி சில்வா 11 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 89 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மீண்டும் இஷான் ஜயரத்னவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸ் 02 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

சற்று நேரத்துக்கு பின்னர் லஹிரு திரிமான்ன, 82 ஓட்டங்களைப் பெற்று லக்‌ஷான் சந்தகனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சென்ற போதிலும், அவர்களை தொடர்ந்து இணைந்து கொண்ட மிலிந்த சிறிவர்தன மற்றும் மினோத் பானுக்க ஆகிய இருவரும் ஆறாவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். நிதானமாக துடுப்பாடிய மிலிந்த சிறிவர்தன 44 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். மினோத் 44 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

Photos: Dambulla vs Galle | Super Provincial One Day 2019

இதன் மூலம் கொழும்பு அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களைப் பெற்றது. இதன்போது தம்புள்ளை அணிக்காக இஷான் ஜயரத்ன 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், இசுரு உதான 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

346 என்ற கடின இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தம்புள்ளை அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஏழு ஓட்டங்களுடனும், நிரோஷன் திக்வெல்ல 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த ஓஷத பெர்னாண்டோ (20) மற்றும் பானுக்க ராஜபக்ஷ (16) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, தம்புள்ளை அணி 87 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தம்புள்ளை அணியை இலகுவாக வீழ்த்திய கொழும்பு

தம்புள்ளை அணிக்கு எதிரான ‘சுப்பர் 4’ மாகாண மட்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில்…

எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியோர் 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தனர். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்றிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், சம்மு அஷானின் பந்தில் தனன்ஞய டி சில்வாவிடம் பிடிகொடுத்து வெளியேற, அஷான் பிரியன்ஜன் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால் தம்புள்ளை அணியினால் 46.5 ஓவர்களில் 269 ஓட்டங்களையே பெற முடிந்தது.

காலி அணியின் பந்துவீச்சில் தனன்ஞய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும், தம்மிக பிரசாத் 2 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

இதன்படி, 76 ஓட்டங்களால் வெற்றிபெற்ற காலி அணி, தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

இதேநேரம், காலி மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையிலான 6ஆவது லீக் ஆட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


Team Dambulla
269/10 (46.5)

Team Galle
345/8 (50)

Batsmen R B 4s 6s SR
Sandun Weerakkody c Oshada Ferenado b Ishan Jayaratne 41 32 8 0 128.12
Lahiru Thirimanne c Isuru Udana b Lakshan Sandajan 82 96 6 1 85.42
Dhanajaya de silva c Niroshan Dickwella b Ishan Jayaratne 89 76 11 0 117.11
Kusal Mendis run out (Oshada Ferenado) 2 5 0 0 40.00
Milinda Siriwardana c Angelo Mathews b Ishan Jayaratne 65 44 7 1 147.73
Shammu Ashan c Niroshan Dickwella b Vishwa Fernando 2 6 0 0 33.33
Minod Bhanuka c Niroshan Dickwella b Isuru Udana 44 36 3 0 122.22
Wanindu Hasaranga c Danushka Gunathilake b Isuru Udana 3 4 0 0 75.00
Dhammika Prasad not out 1 2 0 0 50.00
Dushmantha Chameera not out 1 1 0 0 100.00


Extras 15 (b 0 , lb 2 , nb 2, w 11, pen 0)
Total 345/8 (50 Overs, RR: 6.9)
Bowling O M R W Econ
Vishwa Fernando 7 0 67 1 9.57
Isuru Udana 9 0 64 2 7.11
Ishan Jayaratne 8 0 43 3 5.38
Danushka Gunathilake 8 0 46 0 5.75
Jeevan Mendis 6 0 33 0 5.50
Lakshan Sandajan 9 0 68 1 7.56
Ashan Priyanjan 3 0 22 0 7.33


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Lasitha Malinga b Dhammika Prasad 19 25 2 0 76.00
Danushka Gunathilake b Dushmantha Chameera 7 8 0 0 87.50
Oshada Ferenado c Minod Bhanuka b Lasitha Malinga 20 35 2 0 57.14
Bhanuka Rajapakse st Minod Bhanuka b Wanindu Hasaranga 16 22 0 0 72.73
Angelo Mathews c Wanindu Hasaranga b Shammu Ashan 78 84 7 1 92.86
Ashan Priyanjan c & b Dhanajaya de silva 41 52 3 0 78.85
Jeevan Mendis lbw b Dhanajaya de silva 23 17 0 2 135.29
Isuru Udana c Wanindu Hasaranga b Dhammika Prasad 14 17 1 0 82.35
Ishan Jayaratne c Kusal Mendis b Dhanajaya de silva 26 11 2 2 236.36
Vishwa Fernando not out 1 6 0 0 16.67
Lakshan Sandajan st Minod Bhanuka b Milinda Siriwardana 8 8 2 0 100.00


Extras 16 (b 4 , lb 2 , nb 4, w 6, pen 0)
Total 269/10 (46.5 Overs, RR: 5.74)
Bowling O M R W Econ
Lasitha Malinga 8 1 32 1 4.00
Dushmantha Chameera 6 0 38 1 6.33
Dhammika Prasad 5 0 16 2 3.20
Wanindu Hasaranga 10 0 55 1 5.50
Dhanajaya de silva 9 0 57 3 6.33
Milinda Siriwardana 4.5 0 35 1 7.78
Shammu Ashan 4 0 30 1 7.50