லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இன்று (28) நடைபெற்ற முதல் போட்டியில் சீரற்ற காலநிலை காரணமாக, தம்புள்ள வைகிங் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி டஸ்கரஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை தம்புள்ள வைகிங் அணிக்கு வழங்கியது. அதன்படி, களமிறங்கிய தம்புள்ள வைகிங் அணி சமிட் பட்டேல், அன்வர் அலி, சுதீப் தியாகி ஆகிய வெளிநாட்டு வீரர்களை இணைத்திருந்ததுடன், கண்டி டஸ்கர்ஸ் அணியின் முதல் போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்த இர்பான் பதான் நீக்கப்பட்டிருந்தார்.
சுப்பர் ஓவர் மூலம் LPL தொடரின் முதல் வெற்றியை பெற்ற கொழும்பு கிங்ஸ்
தம்புள்ள வைகிங் – உபுல் தரங்க, ஓசத பெர்னாண்டோ, தசுன் ஷானக (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், சமித் பட்டேல், மலிந்த புஷ்பகுமார, லஹிரு மதுசங்க, அன்வர் அலி, லஹிரு குமார, சுதீப் தியாகி
கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ், நவீன் ஹுல்-ஹக், ப்ரியமல் பெரேரா, நுவான் பிரதீப், கவிஷ்க அஞ்சுல
இவ்வாறான மாற்றங்களுக்கு மத்தியில் இரண்டு அணிகளும் களமிறங்கியிருந்த நிலையில், கண்டி டஸ்கர்ஸ் அணியின் பணிப்பின்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள வைகிங் அணி, தசுன் ஷானக மற்றும் சமித் பட்டேல் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெறமுனைந்த போதிலும், ஓசத பெர்னாண்டோ துரதிஷ்டவசமாக உபாதை காரணமாக ஸ்ட்ரெச்சர் மூலமாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் டிக்வெல்ல (25) மற்றும் உபுல் தரங்க (18) ஆகியோர் ஓட்டங்களை பெற ஆரம்பித்த போதும், அவர்களால் பாரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லமுடியவில்லை. எனினும், தசுன் ஷானக அணித்தலைவராக தன்னுடைய பங்கை சிறப்பாக நிவர்த்திசெய்து, 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை விளாசினார். இவருக்கு அடுத்தப்படியாக சமித் பட்டேல் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பாக அசேல குணரத்ன மற்றும் நவீன் ஹுல்-ஹக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியானது மழைக்காரணமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் மழை குறுக்கிட்ட காரணத்தால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ள வைகிங் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பாக குசல் மெண்டிஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ரஹமனுல்லாஹ் குர்பாஸ் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் அன்வர் அலி, மலிந்த புஷ்பகுமார மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Rahmanullah Gurbaz b Asela Gunarathne | 25 | 18 | 2 | 1 | 138.89 |
Upul Tharanga | c Kamindu Mendis b Asela Gunarathne | 18 | 18 | 2 | 0 | 100.00 |
Samit Patel | c Asela Gunarathne b Naveen ul Haq | 57 | 38 | 5 | 2 | 150.00 |
Dasun Shanaka | c Seekkuge Prasanna b Naveen ul Haq | 74 | 38 | 8 | 4 | 194.74 |
Lahiru Madushanka | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ramesh Mendis | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 0 , lb 4 , nb 0, w 7, pen 0) |
Total | 195/4 (20 Overs, RR: 9.75) |
Did not bat | Oshada Fernando, Lahiru Kumara, Anwar Ali, Malinda Pushpakumara, Sudeep Tyagi, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nuwan Pradeep | 4 | 0 | 46 | 0 | 11.50 | |
Naveen ul Haq | 4 | 0 | 42 | 2 | 10.50 | |
Kavishka Anjula | 3 | 0 | 45 | 0 | 15.00 | |
Dilruwan Perera | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Asela Gunarathne | 3 | 0 | 20 | 2 | 6.67 | |
Seekkuge Prasanna | 3 | 0 | 20 | 0 | 6.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | b Malinda Pushpakumara | 30 | 18 | 4 | 1 | 166.67 |
Kusal Janith | c Ramesh Mendis b Anwar Ali | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Kusal Mendis | not out | 34 | 26 | 2 | 3 | 130.77 |
Kamindu Mendis | c Pulina Tharanga b Lahiru Madushanka | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Asela Gunarathne | not out | 3 | 3 | 0 | 0 | 100.00 |
Extras | 7 (b 1 , lb 2 , nb 1, w 3, pen 0) |
Total | 84/3 (9.4 Overs, RR: 8.69) |
Did not bat | Nuwan Pradeep, Naveen ul Haq, Seekkuge Prasanna, Dilruwan Perera, Priyamal Perera, Kavishka Anjula, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lahiru Kumara | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Anwar Ali | 2 | 0 | 13 | 1 | 6.50 | |
Samit Patel | 2.4 | 0 | 27 | 0 | 11.25 | |
Malinda Pushpakumara | 1 | 0 | 10 | 1 | 10.00 | |
Ramesh Mendis | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Lahiru Madushanka | 1 | 0 | 4 | 1 | 4.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<