புற்றுநோய் விழிப்புணர்வுக்காக புதிய ஜேர்சியுடன் தம்புள்ள சிக்ஸர்ஸ்

Lanka Premier League 2024

35

LPL தொடரின் போது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் வீரர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஜேர்சி மற்றும் மார்பு புற்றுநோய்க்கான பட்டி அணிந்து விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் சுய மார்பக பரிசோதனைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 14ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள கோல் மார்வல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தம்புள்ள அணியின் வீரர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஜேர்சி மற்றும் பட்டியை அணிந்து விளையாடவுள்ளனர். 

இலங்கை இளையோர் அணிக்காக அரைச்சதம் விளாசிய தினுர கலுப்பான

இலங்கையில் மார்பக புற்றுநோய் பரவலாக காணப்படுவதுடன் ஒரு நாளில் 15 பெண்களுக்கு இந்த நோய் தாக்கம் ஏற்படுகின்றது. எனவே இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான முன் உபாயங்களை செய்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என தம்புள்ள சிக்ஸர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை இலங்கையின் முதலாவது குழந்தைநல நோய் அறிகுறி சிகிச்சை நிலையமானசுவ அரணவிலிருந்து (புற்றுநோயுடன் கூடிய குழந்தை நோயாளிகளுகளுக்கு சிகிச்சை வழங்கவும், இலவச தங்கமிடம் உணவு வழங்கும் நிலையம்) 30 குழந்தைகளை போட்டிக்கு அழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமின்றி தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி இளஞ்சிவப்பு நிற ஜேர்சியில் TLC இலட்சினை (Touch: Look: Check), இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் இலட்சினை மற்றும் சுவ அரண இலட்சினை ஆகியவற்றை தங்களுடைய ஜேர்சியில் தாங்கி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<