Home Tamil LPL புதிய சம்பியன்களாக நாமம் சூடிய பி-லவ் கண்டி

LPL புதிய சம்பியன்களாக நாமம் சூடிய பி-லவ் கண்டி

336
Dambulla Aura vs B-Love Kandy

லங்கா பிரிமீயர் லீக் (LPL) 2023  தொடரின் இறுதிப் போட்டியில் பி-லவ் கண்டி அணியானது தம்புள்ள ஓரா அணியினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி முதல் முறையாக LPL தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது.

>> நியூசிலாந்தை வீழ்த்தி ஐக்கிய அரபு இராச்சியம் வரலாற்று வெற்றி

நான்காவது LPL தொடரின் இறுதிப் போட்டி  கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது. முதல் பிளே ஒப் போட்டி மூலமாக தம்புள்ள ஓரா அணியும், இரண்டாவது பிளே ஓப் போட்டி மூலமாக பிலவ் கண்டி அணியும் இப்போட்டியில் ஆடும் வாய்ப்பினை பெற்றிருந்தன.  

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஓரா அணியானது முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது. இதன்படி முதலில் ஆடிய அவ்வணி தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம மற்றும் குசல் பெரேரா ஆகியோரது சிறந்த ஆட்டங்களோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. 

தம்புள்ள அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா 29 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் அடங்கலாக 40 ஓட்டங்கள் எடுத்ததோடு, சதீர சமரவிக்ரம 30 பந்துகளில் 36 ஓட்டங்களையும், குசல் பெரேரா ஆட்டமிழக்காது 25 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பிலவ் கண்டி அணியின் பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார் 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பிலவ் கண்டி அணியினர் போட்டியின் வெற்றி இலக்கை 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களுடன் அடைந்தனர். 

>> அவுஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறும் பிரபல வீரர்கள்

பிலவ் கண்டி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த கமிந்து மெண்டிஸ் 37 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேநேரம் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 21 பந்துகளில் 3 பெளண்டரிகளோடு 25 ஓட்டங்கள் பெற்றார். 

போட்டியின் ஆட்டநாயகனாக அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவாக, தொடர் நாயகன் விருது LPL தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்து தொடரில் அதிக விக்கெட்டுக்கள், அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறிய பிலவ் கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்கவிற்கு வழங்கப்பட்டது. 

போட்டியின் சுருக்கம் 

Result


B-Love Kandy
151/5 (19.5)

Dambulla Aura
147/4 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Mohammad Haris b Nuwan Pradeep  5 10 0 0 50.00
Kusal Mendis c Dinesh Chandimal b Wanindu Hasaranga 22 23 3 0 95.65
Sadeera Samarawickrama b Wanindu Hasaranga 36 30 5 0 120.00
Kusal Janith not out 31 25 2 1 124.00
Dhananjaya de Silva c Angelo Mathews b Mohammad Hasnain 40 29 0 3 137.93
Alex Ross not out 2 3 0 0 66.67


Extras 11 (b 0 , lb 3 , nb 0, w 8, pen 0)
Total 147/4 (20 Overs, RR: 7.35)
Bowling O M R W Econ
Angelo Mathews 2 0 11 0 5.50
Mujeeb ur Rahman 4 0 24 0 6.00
Nuwan Pradeep  4 0 30 1 7.50
Chaturanga de Silva 4 0 25 2 6.25
Mohammad Hasnain 4 0 38 1 9.50
Kamindu Mendis 2 0 16 0 8.00


Batsmen R B 4s 6s SR
Mohammad Haris b Noor Ahmad  26 22 3 1 118.18
Kamindu Mendis c Sadeera Samarawickrama b Noor Ahmad  44 37 3 1 118.92
Dinesh Chandimal c Pramod Madushan b Binura Fernando 24 22 3 0 109.09
Angelo Mathews not out 25 21 3 0 119.05
Chaturanga de Silva c Hayden Kerr b Noor Ahmad  0 4 0 0 0.00
Asif Ali c Kalana Perera b Binura Fernando 19 10 2 1 190.00
Lahiru Madushanka not out 5 3 1 0 166.67


Extras 8 (b 0 , lb 6 , nb 0, w 2, pen 0)
Total 151/5 (19.5 Overs, RR: 7.61)
Bowling O M R W Econ
Binura Fernando 4 0 31 2 7.75
Dhananjaya de Silva 3 0 16 0 5.33
Pramod Madushan 2.5 0 20 0 8.00
Hayden Kerr 3 0 30 0 10.00
Noor Ahmad  4 0 27 3 6.75
Dushan Hemantha 3 0 21 0 7.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<